SpiceJet Flight & Logo (Photo Credit: Wikipedia)

பிப்ரவரி 12, புதுடெல்லி (New Delhi): கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பிரதானமாக உள்நாடு மற்றும் சர்வதேச அளவிலான விமான பயணத்தை இயக்கி வருகிறது ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) நிறுவனம். தற்போதைய நிலைமையில் 73 இலக்குகளை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 60க்கும் மேற்பட்ட நகரங்களையும், சர்வதேச அளவில் 13 நகரங்களையும் இணைத்து இந்நிறுவனம் தனது சேவையை வழங்குகிறது.

1400 பேர் பணிநீக்கம்: முந்தைய காலங்களில் சன் குழுமத்தின் கையிலும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் நிர்வாகம் இருந்து வந்தது. இந்நிறுவனத்திற்கு சொந்தமாக மொத்தமாக 99 விமானங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக 142 விமானங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது ஸ்பைஜெட் நிறுவனம் 1400 பணியாளர்களை நீக்கி ஆதரவு காண்பித்துள்ளது. இது ஸ்பைஜெட்டின் மொத்த பணியாளர்களில் 15 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. Happy Hug Day 2024: அரவணைப்பு நாள்.. கட்டிப்பிடி வைத்தியத்தால் அதிகரிக்கும் காதல் ஹார்மோன்..!

நிதிச்சுமையால் நடவடிக்கை: நிதி பிரச்சனை, எதிர்கால செலவினங்களை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னிறுத்தி பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே நிதிச்சுமை காரணமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலாமல் திணறி வருவதாகவும் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

16000 ஊழியர்களில் இன்று 9000 பேர்: ஆனால், இந்த கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தங்களது எதிர்கால முன்னேற்றம் கருதியே பணிநீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்து இருக்கிறது. தற்போது 9000 பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் ஸ்பைஜெட் நிறுவனம், கடந்த 2019 ஆம் ஆண்டில் 16000 பணியாளர்களுடன் செயல்பட்டு வந்தது, 118 விமானங்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.