United Airlines Flight Affect Air Turbelance: திடீரென மாறிய காற்றின் வேகம்; நடுவானில் தத்தளித்த விமானம்.. பயணிகள் உடல்நலக்கோளாறால் அவதி.!
ஒருசில நேரம் பயணிகளுக்கு இதனால் உடல்நல கோளாறு ஏற்படும் வாய்ப்பும் உண்டாகும்.
மார்ச் 30, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள டெல் அவிவ் நகரில் இருந்து, நியூஜெர்சி மாகாணம், நெவார்க் சர்வதேச விமான நிலையம் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 ரக விமானம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. விமானம் தரையிறங்கும் போது நியூஜெர்சியில் வீசிய கடுமையான காற்று மற்றும் பிற சூழ்நிலைகள் காரணமாக அங்கு தரையிறக்க இயலாமல் போனது. Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்; 48 வயதிலேயே நடந்த சோகம்.! குடும்பத்தினர் கண்ணீர்.!
பயணிகள் பதற்றம்: இதனையடுத்து, விமானம் அங்கிருந்து நியூயார்க்கில் இருக்கும் ஆரஞ்சு கவுண்டி விமான நிலையத்திற்கு திருப்பிடப்பட்டிருக்கிறது. விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக கடுமையான கோளாறுகளை சந்தித்த நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகள் பலரும் குமட்டல், வாந்தி போன்றவற்றை சந்தித்திருக்கின்றனர். மொத்தமாக 300 பயணிகளும் இதனால் பாதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றனர். அதன்பின் அவர்களின் பதற்றம் தணிந்தது.
நல்வாய்ப்பாக காற்று சுழற்சி நீண்ட நேரம் தொடர காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.