மார்ச் 30, சென்னை (Cinema News): கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், காதல் கொண்டேன், காக்க காக்க ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் டேனியல் பாலாஜி (Daniel Balaji), தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த போது டேனியல் என்ற கதாபாத்திரம் தமிழக மக்கள் இடையே மிகப்பிரபலமாக இருந்ததால் பின்னர் அவ்வாறே அறியப்பட்டார். BTech Student Suicide: பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலை; விசாகப்பட்டினத்தில் சோகம்.!
வில்லன் ஆயினும், எளிய குணம் கொண்டவர்: காக்க காக்க திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், பின் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் உட்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருந்தார். விஜயுடன் பைரவா படத்திலும் வில்லனாக தோன்றியிருந்தார். நடிகர் முரளியின் நெருங்கிய சொந்தக்காரரான டேனியல் பாலாஜி எளிய குணம், இறைவழிபாடு பக்தி கொண்டவர் ஆவார். சென்னையில் சொந்தமாக கோவில் ஒன்றையும் கட்டி இருந்தார். Thootukudi Shocker: அடச்சீ.. நீயெல்லாம் ஒருதாயா?.. தாய் செய்யும் காரியமா இது?.. 3 வயது பெண் குழந்தையின் அந்தரங்க வீடியோவை கள்ளகாதலனுக்கு அனுப்பிய பயங்கரம்.!
மாரடைப்பால் மரணம்: இந்நிலையில், நேற்று கொட்டிவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கிறார். உடனடியாக குடும்பத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நடிகர் முரளியை போலவே இவரும் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.