Fuel Truck Crash: எரிபொருள் ஏற்றிவந்த லாரி விபத்தில் சிக்கி சோகம்; 48 பேர் உடல் கருகி பலி..!
எரிபொருள் வாகனம் விபத்திற்குள்ளாகி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 48 பயணிகள், 50 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
செப்டம்பர் 09, அபுஜா (World News): நைஜீரிய நாட்டில் உள்ள வடக்கு - மத்திய நைஜர் (Niger) மாகாணத்தில், அகையே (Agaie) பகுதியில் எரிபொருள் ஏற்றிவந்த கனரக வாகனம் - பசுக்களை ஏற்றிவந்த வாகனத்துடன் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், இரண்டு வாகனங்களுக்கு நெருக்கமாக, பயணிகள் பயணித்த மற்றொரு வாகனமும் இருந்தது. இதனிடையே, எரிபொருள் வாகனம் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில், கனரக வாகனம் வெடித்து சிதறியது. Cristiano Ronaldo Records: வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ.. 900 கோல்கள் அடித்து அசத்தல்..!
கரிக்கட்டையான உடல்கள்:
இந்த சம்பவத்தில் 48 பேர் உயிருடன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிருடன் எரித்து சாம்பலாகின. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிந்து கரிக்கட்டை போல் இருப்பதால், பலரின் அடையாளம் சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவை பொறுத்தமட்டில் கடந்த 2020ம் ஆண்டு மட்டும் 1531 எரிபொருள் வாகனங்கள் விபத்தில் சிக்கி, 535 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். 1142 பேர் படுகாயமடைந்து இருக்கிறார்கள்.