Bus Plunges into Valley: பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து; 20 பேர் பலி., 15 பேர் படுகாயம்.!
40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணத்தை தொடங்கிய பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சோகம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
மே 03, காரகோணம் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள வடமேற்கு மாகாணமான கில்கித் - பல்டிஸ்டான், டிஅமீர் மாவட்டம், காரகோணம் நெடுஞ்சாலையில் ராவல்பிண்டியில் இருந்து ஹன்சா நோக்கி 40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்ட பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டு இருந்தது. இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் உயிரை காப்பாற்றக்கூறி மரண ஓலமிட்டனர். விபத்தை கண்டு அதிர்ந்துபோன மக்கள், காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். Caviar Gold Plated Bike: கேவியர் நிறுவனத்தின் முதல் இ- பைக்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?.!
20 பேரின் உயிரை காவு வாகிய விபத்து: தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விபத்தில் பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மொத்தமாக விபத்தில் 20 பேர் பலியானது மீட்பு பணிகளுக்கு பின் உறுதி செய்யப்பட்டது. மேலும், 15 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கில்ஜித் பல்டிஸ்டான் மாகாணத்தின் முதலமைச்சர் ஹாஜி குல்பர் கான், தனது இரங்கலை தெரிவித்தார். மேலும், விபத்தில் காயமடைந்தோருக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்கிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விபத்து காணொளி:
பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்தில் இருந்து சிதறிக்கிடக்கும் பயணிகளின் உடமைகள்: