Sudan Girls Ask Abortion Pill: சிறுமிகள் உட்பட 8 ஆயிரம் பெண்கள் கற்பழிப்பு; கர்ப்பத்தை தவிர்க்க கருத்தடை மாத்திரை கேட்கும் சூடான் மக்கள்.! வாழ்விடம் தேடி புலம்பெயரும் பரிதாபம்.!
குற்றவாளிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடுமையை அனுபவிக்கும் சிறுமிகளும், இளம்பெண்களும் தாங்கள் கர்ப்பமாவதை தடுக்க கருத்தடை மாத்திரைகளை கேட்கும் அவலம் சூடானில் அரங்கேறுகிறது.
டிசம்பர் 22, சூடான் (World News): சர்வதேச அளவில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் நலிவடைந்த நாடுகளில் முதன்மையாக இருப்பது சூடான் (Sudan Crisis). இந்நாட்டில் உள்ள மக்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக குடிபெயரும் பட்டியலிலும் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் புதிய உச்சகட்ட வேகத்துடன் தொடங்கிய உள்நாட்டு போரின் காரணமாக, தற்போது வரை 12000க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். அக்டோபர் முதல் நவம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட நாட்களில் மட்டும் 1300 பேர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.
தொடரும் உள்நாட்டு போர்: உணவுப்பஞ்சம், தண்ணீர் தட்டுப்பாடு, எரிபொருள் இல்லாதது, தொலைத்தொடர்பு & மின்சார வசதி என எந்த விதமான அடிப்படை வசதியும் இன்றி தவித்து வரும் மக்களை, அங்குள்ள ஆயுதம் ஏந்திய குழு கிராமம் கிராமமாக சென்று தாக்கி, அவர்களை மிரட்டி, அவர்களிடம் எஞ்சியுள்ள பணத்தையும் கேட்டு கொடுமை செய்கிறது. இவ்வாறான செயல்களால் அங்குள்ள மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து வருகின்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய வன்முறை சம்பவமானது, தற்போது வரை தொடர்ந்து வருவதால், பல நாடுகளும் அங்கு தனது நாட்டு மக்களை அனுப்புவதற்கு விரும்புவதில்லை. தனது நாட்டுப் பயணிகள் அங்கு செல்வதற்கும் தடை விதித்து இருக்கிறது. Kan Kan Me Ram: பிரம்மாண்ட கும்பாவிஷேகத்திற்கு தயாராகும் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில்: கவனத்தை ஈர்க்கும் ஸ்ரீ ராமர் கீ செயின்கள்.!
இஸ்ரேல் பிரச்னை: கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கில், இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர் தொடர்பான பிரச்சனை காரணமாக சர்வதேச அளவிலான ஊடகங்களும் அதனையே முதன்மைப்படுத்தி பல்வேறு செய்திகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், சூடானின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக சென்று கொண்டிருப்பது சமீபத்தில் உறுதியாகி உள்ளது. சூடானில் வசித்து வரும் பெண்கள் வயது வித்தியாசம் இன்றி ஆயுதம் ஏந்திய கும்பலால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்வது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் வரை தாங்கள் கர்ப்பமாவதை தடுக்க கருத்தடை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துவதாகவும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
கருத்தடை மாத்திரை கேட்கும் பெண்கள்: இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் @Fkkuromi என்ற பெண்மணி தற்போது பதிவு செய்துள்ள அதிர்ச்சி தகவல் உலக நாடுகளை பதற வைத்துள்ளது. கிட்டத்தட்ட 8,000 அதிகமான சூடான் பெண்கள் பலவந்தமாக கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், இதனால் அவர்கள் தங்கள் கர்ப்பம் அடைவதை தவிர்க்க கருத்தடை மாத்திரைகள் கேட்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், பெண்களை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்யும் கும்பல், சில நேரம் அவர்களை கொலை செய்வதாகவும் கூறியிருக்கிறார். இதனால் உலக நாடுகள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுமியின் அதிர்ச்சி கேள்வி: அவரின் மற்றொரு பதிவில், சூடானைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது குறுஞ்செய்தி ஒன்றில் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து, பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்ளலாமா? அதுதான் தீர்வாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ள பதிவையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பான பதிவுகள் வெளியாகி தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த 2 நாட்கள் நிலவரப்படி மட்டும், 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் சாலை வழி குடிபெயர்வு முயற்சியை மேற்கொண்டு இருக்கின்றனர்.
குடிபெயரத்தொடங்கும் மக்கள்:
காசாவை விட அதிகம்: