US Shocker: பெற்றோர், வளர்ப்பு நாய் கொடூர கொலை; 41 வயது இளைஞரை நடுரோட்டில் சுட்டுப்பிடித்த காவல்துறை.!

கூர்மையான ஆயுதம் கொண்டு பெற்றோரை கொடூரமாக கொலை செய்த இளைஞர், காவல்துறையினரால் கால்களில் 5 முறை துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டார்.

Joseph Gerdvil was Shot by Police (Photo Credit: @Mrgunsngear X)

ஆகஸ்ட் 27, கலிபோர்னியா (World News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா (California) மாகாணம், சான் ஜுவான் காபிஷ்டிரனோ (San Juan Capistrano) பகுதியில், இளைஞர் ஒருவர் தனது தாய்-தந்தை மற்றும் அவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்லப்பிராணியாக நாயை கொலை செய்துவிட்டு வீதிகளில் சுற்றுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரை கைது செய்ய முற்பட்டபோது, கூர்மையான ஆயுதத்தால் அதிகாரிகளை நோக்கி வேகமாக வந்துள்ளார். Pakistan Terrorist Attack: பேருந்தை வழிமறித்து ஈவு-இரக்கமின்றி சரமாரியாக துப்பாக்கிசூடு; 23 அப்பாவி பொதுமக்கள் பலி.. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டகாசம்..!

துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்த அதிகாரிகள்:

இதனால் இளைஞர் தன்னை தாக்க வருகிறார் என்பதை உணர்ந்த அதிகாரி, அங்கேயே நிற்குமாறு எச்சரித்தும் பலன் இல்லை. தொடர்ந்து இளைஞர் முன்னேற, அதிகாரி பாதுகாப்பு கருதி இளைஞரின் கால்களை குறிவைத்து 5 முறை அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் இளைஞரின் கால்களில் குண்டுகள் பாய்ந்து சுருண்டு விழுந்தார். அவரை உடனடியாக கைவிலங்கு மாட்டி கைது செய்த அதிகாரிகள், சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

தன்னை கொலை செய்ய கோரிக்கை வைத்த குற்றவாளி:

விசாரணையில், 41 வயதுடைய ஜோசப் கெரடிவில் (Joseph Gerdvil) என்ற நபர், தனது பெற்றோர் மற்றும் வளர்ப்பு நாயை கொலை செய்தது அம்பலமானது. இவர் குண்டடிபட்டு வீழ்ந்தபோது, கைது செய்ய வந்த அதிகாரிகளிடம் "நான் எனது குடும்பத்தை நேசித்தேன். என்னை முடித்துவிடுங்கள் (கொன்றுவிடுங்கள்)" என கூறி இருக்கிறார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்திருக்க வேண்டும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இளைஞரின் மீதான குற்றசாட்டு விசாரணைக்கு பின்னர் ஆதாரபூர்வமாக உறுதியாகும் பட்சத்தில், அவருக்கு பரோலில் வெளிவர இயலாத கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் கலிபோர்னியா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஜோசப்பை கைது செய்யச் சென்றபோது எடுக்கப்பட்ட பதைபதைப்பு காணொளி: