Chewing Gum Helps to Find Rape Accuse: 19 வயது இளம்பெண் கற்பழித்துக்கொலை.. 40 ஆண்டுகள் கழித்து குற்றவாளி சிக்கியது எப்படி?.. விபரம் உள்ளே.!
இவ்விவகாரத்தில் சுவிங்கம் குற்றவாளியை கண்டறிவதில் பெரும் பங்கு வகித்து இருக்கிறது.
மார்ச் 24, ஒரேகான் (World News): அமெரிக்காவில் உள்ள ஒரேகான் (Oregon) மாகாணம், திரௌட்டேல் பகுதியை சேர்ந்த பெண்மணி பார்பரா டக்கர் (Barbara Tucker). கடந்த 1980ம் ஆண்டு இவர் மவுண்ட் ஹூட் கம்யூனிட்டி கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவரின் 19 வயதில், ஜனவரி 15, 1980 அன்று கல்லூரியில் மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்ட பெண்மணி, மறுநாள் வாகன நிறுத்துமிடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை கடத்தி சென்றது யார்? என்ற விசாரணையில் அதிகாரிகள் இறங்கி இருந்தனர். மேலும், பெண்ணின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
குற்றவாளியை கண்டறிவதில் சிக்கல்: பிரேத பரிசோதனை முடிவில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரின் உடல் மாதிரிகள் அனைத்தும் சேகரித்து வைக்கப்பட்டன. மேலும், பெண்ணின் பிறப்புறுப்பில் ஆணின் உயிரணு மாதிரிகள், சம்பவம் நடத்த இடத்தை கண்டறிந்து அங்கு கிடைத்த மாதிரிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. ஆனால், குற்றவாளி இறுதி வரை கண்டறியப்படவில்லை. இதில் முக்கிய தடயமாக குற்றவாளி சாப்பிட்டு விட்டுச்சென்ற சுவிங்கம் (Chewing Gum Leads to Found Rape Accuse) கண்டறியப்பட்டது. அதன் டிஎன்ஏ மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டன. Chain Snatched When Women Preparing Reels Video: ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணிடம் செயின்பறிப்பு; பட்டப்பகலில் பகீர் செயல்.. வீடியோ வைரல்.!
சுவிங்கத்தை வைத்து குற்றவாளியை தூக்கிய அதிகாரிகள்: கிட்டத்தட்ட பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிகழ்வு நடந்து 40 ஆண்டுகள் கடந்த பின்னர், ஜூன் மாதம் 08ம் தேதி 2021 அன்று புதிய தொழில்நுட்பத்துடன் மறுவுவாக்கம் செய்யப்பட்ட டிஎன்ஏ வைத்து ராபர்ட் ப்ளைம்ப்டன் (Robert Plympton) என்பவரின் மீது அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். 58 வயதிலும் சுவிங்கம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்த ராபர்ட், சாப்பிட்டு துப்பிய மாதிரிகளை ரகசியமாக சேகரித்த அதிகாரிகள் அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 1980ல் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட குற்றவாளியின் டிஎன்ஏ மாதிரியும், ராபர்டின் மாதிரியும் ஒன்று என்பதை உறுதி செய்தனர்.
பழமொழியை நிரூபித்து காண்பித்த வாழ்க்கை சுழற்சி: இதனையடுத்து, அவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள், விசாரணையில் குற்றத்தை உறுதி செய்தனர். ராபர்ட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது 60 வயதாகும் அவரை சிறை வாழ்க்கையில் இருக்கிறார். வரும் ஜூன் மாதம் அவருக்கான இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது. "உப்பு தின்றவர் தண்ணீர் குடித்தாகவேண்டும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, தனது இளவயதில் செய்த தவறுக்கு அப்போது தற்காலிகமாக தப்பித்தலும், 60 வயதில் அவர் சிறைவாழ்க்கையை எதிர்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வினைக்கும் (நல்/தீ), அதே அளவு சமமான எதிர்வினை இருக்கும்.