Young Indian Techie Died in US: 24 வயது பெண் தொழில்நுட்ப வல்லுநர் மரணம்; அமெரிக்காவில் இந்தியருக்கு விபத்தில் நடந்த சோகம்.!
விபத்து ஒன்றில் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றிருந்த பெண்மணி உயிரிழந்துவிட, அவரின் உடல் விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 24, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தை சேர்ந்தவர் அர்ஷியா ஜோஷி (வயது 24). கடந்த ஆண்டு தனது பட்டப்படிப்பை இந்தியாவில் நிறைவுசெய்தவர், வேலைக்காக அமெரிக்கா சென்று, தற்போது அங்கு தங்கியிருந்தவாறு பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 21ம் தேதி நடந்த விபத்து ஒன்றில் அர்ஷியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை நியூயார்க் இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. Moscow Terror Attack Video Out Now: 130 பேரின் உயிரை பறித்தது எப்படி?.. ரஷ்ய தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியானது.. பதைபதைப்பு காணொளி உள்ளே.!
உடலை இந்தியாவுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்: இந்த தகவல் தூதரக அதிகாரிகள் வாயிலாக அர்ஷியாவின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஷியா ஜோஷியின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில் மோகன் நன்னப்பனேனி என்பவரால் நடத்தப்பட்டு வரும் டீம் எய்டு (TEAM Aid) எனப்படும் குழு, அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் விபத்து உட்பட பிற காரணங்களால் உயிரிழந்தால், அவர்களுக்கான உதவிகளை செய்து வருகிறது. டீம் எய்டு குழு சார்பில் சமீபத்தில் நியூ மெக்சிகோவில் உயிரிழந்த லாரி ஓட்டுனர்களின் உடல் பஞ்சாப் மற்றும் அமிர்தசரஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல, வாஷிங்க்டன் ஷியாட்டல் நகரில் உயிரிழந்த 25 வயது கல்லூரி மாணவரின் உடலும் பெங்களூருக்கு அனுப்பப்பட்டது.