Moscow Attack (Photo Credit: @CollinRugg X

மார்ச் 24, மாஸ்கோ (World News): ரஷிய தலைநகர் மாஸ்கோ (Moscow Terror Attack), க்ரோகஸ் சிட்டி மாலில் நேற்று ஐஎஸ் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு நடத்தினர். 4 பேர் கொண்ட கும்பலால் நடந்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் கண்ணில் பாடுபட்டவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 140 பேர் வரை உயிரிழந்து இருக்கின்றனர். 150 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நேரடியாகவே ஐஎஸ் பொறுப்பேற்று இருக்கிறது. Moscow ISIS Militants Attack: மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலில் 60 பேர் துள்ளத்துடிக்க பலி., ரஷ்ய அரசு, மக்களுடன் துணைநிற்போம் – நரேந்திர மோடி.! 

அமெரிக்காவின் எச்சரிக்கையும், மாஸ்கோ தாக்குதலும்: சமீபத்தில் ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்து, மீண்டும் ரஷிய அதிபராக விளாடிமிர் (Vladimir Putin) புதின் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே, ரஷியாவில் பயஞராவத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையை அறிந்த அமெரிக்கா, அது குறித்த எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது. அதன்படி, இறுதியில் ஐஎஸ் தாக்குதல் நடத்தி முடித்துள்ளது. ஈராக், ஆப்பிரிக்கா, சிரியா ஆகிய நாடுகளை மையமாக கொண்டு செயல்படும் ஐஎஸ் பயங்கரவாதிகள், சமீபகாலமாகவே ரஷியாவில் தாக்குதல் நடத்தும் முனைப்புடன் இருந்து வந்துள்ளனர். இம்மாதத்தின் தொடக்கத்தில் அங்குள்ள காக்கவஸ் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் ரஷிய படையால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளனர். Abishek Porel Destructive Batting: அதிரடி காட்டிய இளம் வீரர் – கடைசி ஓவரில் வெளுத்து வாங்கிய அபிஷேக் போரெல்..!

வீடியோ வெளியிட்ட பயங்கரவாதிகள்: கடந்த 2014 விமான தாக்குதலுக்கு பின்னர், நேரடியாக ஐஎஸ் பயங்கரவாதிகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், மாஸ்கோவில் நடைபெற்ற தாக்குதலின் பதைபதைப்பு காணொளிகள் வெளியாகி இருக்கிறது. அந்த காணொளியில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாக்குதலை வீடியோவாக பதிவு செய்து, அதனை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர். மேலும், இஸ்லாமியர்களின் உரிமைக்காக தாங்கள் போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ரஷ்ய அதிகாரிகள், தற்போது வரை பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய நான்கு பயங்கரவாதிகளும் விசாரணை வளையத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.