Cicada Insects: 221 ஆண்டுகளுக்கு பின் ஜாம்பி பூச்சிகள் படையெடுப்பில் சிக்கிய அமெரிக்கா; வியப்புடன் பதறவைக்கும் வினோதம்.!

நிலத்துக்கடியில் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் அதிகமாய் காத்திருக்கும் பூச்சி இனம் ஒன்று, தட்ப வெப்பநிலை தனக்கு சாதமானதும் வெளியில் வந்து தனது சந்ததியை பெருக்க முட்டையிடும்..

Cicada Insects (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 05, கலிபோர்னியா (World News): அமெரிக்காவில் உள்ள 17 க்கும் மேற்பட்ட மாகாணங்களில், சமீபத்தில் நிலத்துக்குள் 221 ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்த சிக்காடா (Cicada Found on US) எனப்படும் பூச்சியினங்கள் நிலத்திற்கு மேலே வரத்தொடங்கியது. இவை கடந்த 221 ஆண்டுகளாக நிலத்தடியில் இருந்த நிலையில், தற்போது வெப்பநிலை காரணமாக பூமியின் மேற்பரப்புக்கு வரத்தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து கடந்த 1803ம் ஆண்டுக்கு பின் சிக்காடா வகை பூச்சிகள் நிலத்துக்கு வந்துள்ளன. இவை பூமியில் இருந்து வெளியே வந்து மரங்களுக்கு அருகே முட்டையிட்டு தனது சந்ததியை வளர்கிறது. இந்த விஷயம் குறித்து கான்டெக்ட்டிக் பல்கலைக்கழக சிக்காடா நிபுணர் ஜான் கூறுகையில், Anti-Terrorism Squad Arrested Two Pakistani Nationals: இந்தியாவில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் சதி திட்டம் முறியடிப்பு.. உபியில் மூன்று பேர் பரபரப்பு கைது..!

வெப்பநிலையை உணர்ந்து வெளிவந்த சிக்காடா: "இது ஒரு இயற்கையான நிகழ்வு. சிக்காடா தனது வாழ்வியல் சுழற்சியின் ஒருபகுதியாக 221 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்திருக்கிறது. இவை அதிகரிப்பும் வெப்பநிலை காரணமாக தரையில் வெளிப்பட்டு இருக்கிறது. பல ஆண்டுகளாக நிலத்தின் கீழ் வசித்து வரும் சிக்காடா, தனது வெப்பநிலைக்காக காத்திருந்து பின் நிலத்திற்கு வந்து முட்டையிடும். இவை நிலத்திற்குள் தாவரங்களின் வேர்களில் இருக்கும் திரவங்களை உண்டு உயிர்வாழும்.

பூஞ்சையால் சாம்பியாக (Zombie Cicada) மாறும்: தற்போது நடைபெற்றுள்ள அறிய நிகழ்வு 2024 ஏப்ரல் மாதத்திற்கு பின் 2244ம் ஆண்டு நிகழும். இவை மனிதர்களுக்கு, செல்லப்பிராணிகளுக்கு, வீட்டுத்தோட்டங்களுக்கு, பயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை. மண்ணை காற்றோட்டமாக்கி விதைகளுக்கு உணவு, உயிர் ஆதாரத்தை வழங்குவதால் மண்ணுக்கு ஊட்டச்சத்து வழங்கி பயன் சேர்க்கும். இவற்றில் சில சிக்காடா பூஞ்சை தொற்று காரணமாக பாதிக்கப்பட்டால், அவை ஜாம்பிஸ் போல நடத்தை மாற்றத்துடன் செயல்படும். பூஞ்சையை உட்கொள்ளும் சிக்காடா மட்டுமே இதனால் பாதிக்கப்படும். மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால், இவை தற்போது எங்கு பார்த்தாலும் தோன்றும்" என கூறினார்.