ஏப்ரல் 04, லக்னோ (Uttar Pradesh): பாகிஸ்தான் (Pakistan) நாட்டின் தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் இந்தியாவில் தீவிரவாத செயல்கள் நடைபெற உள்ளதாக உத்திர பிரதேச மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு (Anti-Terrorism Squad) உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பேரில் அவர்கள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இந்தியா-நேபாள எல்லை சோனாலியில் மூவரும் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர், முகமது அல்தாப் பட் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வசிப்பவர். மற்றொருவர் சையத் கசன்பர் இஸ்லாமாபாத்தில் வசிப்பவர். மூன்றாவதாக கைது செய்யப்பட்டவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இந்தியர் நசீர் அலி. இவர் தான், பாகிஸ்தானில் இருந்து அவர்கள் இருவரும் இந்தியாவிற்கு வருவதற்கு உதவியுள்ளார். மேலும் அவர்களுக்கு போலி ஆதார் அட்டைகளையும் தயார் செய்து கொடுத்துள்ளார். Suryakumar Yadav To Join Mumbai Indians: "வந்துட்டேன் சொல்லு.. திரும்பி வந்துட்டேனு சொல்லு.." காயத்திலிருந்து மீண்ட ஸ்கை.. மும்பை தலையெழுத்தைத் திருத்தி எழுதுவாரா?.!
இவர்கள் 3 பேரையும் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தபோது, 2 மொபைல் போன்கள், 2 மெமரி கார்டுகள், 3 பாஸ்போர்ட், 7 டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், 3 ஆதார் கார்டுகள், 2 விமான டிக்கெட்டுகள், பாகிஸ்தான் ஓட்டுநர் உரிமம், பாகிஸ்தான் தேசிய அடையாள அட்டை, மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும், ஐஎஸ்ஐ உதவியுடன் ஹிஸ்புல் முஜாகிதீன் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.