Mount Marapi Volcano Erupted: இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது: மலையேற்ற குழுவை சேர்ந்த 11 பேர் பலி., 12 பேர் மாயம்.!
இதனால் சில நேரங்களில் நிலநடுக்கம், சுனாமியும் ஏற்படும்.
டிசம்பர் 04, சுமத்ரா (Sumatra): இந்தோனேசியா நாட்டில் உள்ள சுமத்ரா தீவில், மவுண்ட் மராபி (Mount Marapi) உள்ளது. 2,891 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் மராபி, நேற்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் எரிமலை சாம்பல்களை வெளியேற்ற தொடங்கியுள்ளது.
3 கி.மீ அளவில் எரிமலை சாம்பல்களை கக்கியது: வானில் சுமார் 3000 மீட்டர் (3 கி.மீ) உயரம் அளவில் எரிமலை சாம்பல்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. நேற்று மற்றும் அதற்கு முன்தினம் வார இறுதி நாள் என்பதால், எரிமலைக்கு 80 பேர் கொண்ட குழு மலையேற்ற (Hikers) சுற்றுலாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
12 பேரின் நிலை தெரியவில்லை: இவர்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 49 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சிய 12 பேரின் நிலை என்ன? என்பது குறித்து தற்போது வரை தெரியவில்லை. Kidney Stone: சிறுநீரக கற்கள் பிரச்சனை உடையோர் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?.. தவிர்ப்பது எப்படி?.. டிப்ஸ் இதோ.!
மீட்புப்பணிகள் தீவிரம்: அவர்களை மீட்புப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். பாதிக்கப்படக்கூறிய இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
130 எரிமலைகள்: இந்தோனேஷியாவில் உள்ள பயங்கரமான எரிமலைகளில், மவுண்ட் மராபி முக்கியமான ஒன்று. அது எப்போது வெடித்து சிதறினாலும் 3 கிலோமீட்டர் சுற்றளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆசியாவில் இந்தோனேஷியாவில் மட்டும் 130 எரிமலைகள் தற்போதும் செயல்பாட்டில் இருக்கின்றன.
சுற்றுலாவுக்கு பெயர்போனது: இந்தோனேஷியா நாடு சுற்றுலாவுக்கு மிகவும் பெயர்பெற்ற நாடாகும். பல நாடுகளை சேர்ந்தவர்களும் அங்கு வந்துசெல்வது வழக்கம். ஆனால், அழகில் ஆபத்து இருக்கும் என்பதை இந்தோனேஷியாவும் உறுதி செய்ய, பல இயற்கை பேரிடர்களை கொண்டுள்ளது.