![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/12/Doctor-Kidney-Stone-Photo-Credit-Pixabay-380x214.jpg)
நவம்பர் 03, சென்னை (Chennai): தாதுக்கள் நமது உடலில் அதிகமாக சேரும் சமயத்தில், அவை சிறுநீரகத்தில் படிந்துவிடுகிறது. அதிகப்படியான சிறுநீரக தாதுக்கள் சிறுநீரக கற்களாக உருவெடுக்கின்றன. சிறுநீரக கற்கள் சார்ந்த பிரச்சனையை முதலிலேயே கண்டறிந்து சரி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. அவை அதிகமாகும் பட்சத்தில், நீண்ட தொடர் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: சிறுநீரகத்தில் கற்கள் சார்ந்த பிரச்சனை உடையோர் திராட்சை, முந்திரி, பாதம், பிஸ்தா, வேர்க்கடலை, இனிப்பு தின்பண்டங்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வால்நட், ஸ்ட்ரா பெரி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வகை உணவுகளில் ஆக்சலேட் இருப்பதால், சிறுநீரக கற்கள் அதிகரிக்கும்.
இறைச்சிகளில் கவனம்: அதேபோல, மீன், ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, முட்டையில் உள்ள புரதங்களின் காரணமாகவும் சிறுநீரக கற்கள் உண்டாகும். இதனால் சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்பட்டோருக்கு, புதிய கற்களை உருவாக்க இவை வழிவகை செய்யும். தக்காளி சாப்பிடுவதையும், செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். Naa Naa Movie Release Date: சசிகுமார், சரத் குமார் நடிப்பில் உருவாகியுள்ள நா நா திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு: விபரம் உள்ளே.!
துரித உணவுகள்: உப்பு மற்றும் அதுசார்ந்த உணவுப்பொருட்கள், துரித உணவகங்களில் தயார் செய்யப்படும் உணவுகள் போன்றவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும். சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுவோர், நீர் நிறைந்துள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்வது நல்லது. அவை சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற உதவி செய்யும்.
நீரே முதல் மருந்து: உடலுக்கு தேவையான அளவு நீரை அவ்வப்போது சுழற்சி முறையில் தொடர்ந்து குடிப்பது சிறுநீரக கற்கள் பிரச்சனையை முதலில் தடுக்கும். நாவறட்சி ஏற்பட்டு எப்போதும் நீர் குடிப்பது, அதிக உப்புகள் சேர்க்கப்பட்ட துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளை எப்போதும் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு மூலகாரணமாக அமைகிறது.