Iranian Student Strips In Protest: ஹிஜாப்பை எதிர்த்து உள்ளாடையுடன் போராடிய மாணவி.. அதிரடியாக கைது செய்த அரசு.!

ஹிஜாப்பை சரியாக அணியாததால் பாதுகாப்பு படையினர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்திய மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Iranian Student (Photo Credit: YouTube)

நவம்பர் 04, டெஹ்ரான் (World News): ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் ஹிஜாப்பை சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவியை பொது இடத்தில் வைத்து சிறப்பு பாதுகாப்பு படையினர் அடித்து எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவி, பல்கலைக்கழக வளாகத்திலேயே தனது ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் அங்குமிங்கும் நடந்தார். தனது உடலையே போராட்ட ஆயுதமாக்கினார். தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக விரைந்து வந்து மாணவியை கைது செய்து அழைத்துச் சென்றனர். Peanut The Squirrel: இணையத்தை கலக்கிய அணில் கருணைக்கொலை.. குவியும் கண்டனங்கள்.. எலான் மஸ்க் ஆவேசம்.!

அந்த மாணவி மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறி உள்ளது. தற்போது அந்த மாணவி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே, மாணவி அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளன. மாணவியின் தைரியத்தை பாராட்டி பலரும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் மாணவி துன்புறுத்தப்படலாம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க பல சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன.

ஈரான் பல்கலை.-யில் ஆடைகளைக் களைந்து நடந்த பெண்: