Peanut The Squrriel (Photo Credit: @elonmusk X)

நவம்பர் 03, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க் வசித்து வரும் மார்க் லாங்கோ (Mark Longo) என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் சென்றுகொண்டு இருக்கும்போது, விபத்தில் சிக்கி உயிரிழந்த தாய் அணிலுக்கு அருகே தவித்துக்கொண்டு இருந்த குட்டி அணிலை (The Squirrel) மீட்டெடுத்து, தன்னுடன் குடும்ப உறுப்பினர் போல வளர்த்து வந்தார். இதனை வைத்து அவ்வப்போது பதிவு செய்த விடியோவுக்கு உலகளவில் வரவேற்பு கிடைக்கவே, பலரும் அந்த அணிலுக்கு பீனட் தி ஸ்குரில் (Peanut the Squirrel Mercy Killing) என பெயரிட்டு அன்புடன் கவனித்து வந்தனர். அணிலின் சின்னசின்ன செயல்பாடுகள், அவை வேர்கடலைகளை விரும்பி வாங்கி உண்ணுவது தொடர்பான காணொளிகளை கண்டு ரசித்து வந்தனர். Spain Flash Floods: ஸ்பெயின் பெருவெள்ளம் பாதிப்பு; பலி எண்ணிக்கை 205ஆக அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி..! 

அணில் கொல்லப்பட்டதற்கு கண்டனம்:

இதனிடையே, சமீபத்தில் வைரஸ் தொடர்பான சோதனைக்காக அணிலை நியூயார்க் மாநகர அதிகாரிகள் வீட்டிற்குள் வந்து பிடித்த நிலையில், அது ஒரு அதிகாரியை கடித்து வைத்தது. இதனால் அதிகாரிகளால் அணில் கருணைக்கொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. இந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை அங்கு ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அணிலை வளர்த்து வந்த மார்க்கும் சோகத்தில் இருக்கிறார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்-கும் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அணில் கொல்லப்பட்டதற்கு ரசிகர்கள் வேதனை:

எலான் மஸ்க் கண்டனம் & டொனால்ட் ட்ரம்ப் அதிபரானதும் அணில்களை பாதுகாப்பார் என பிரச்சாரம்: