Iraq Controversial Marriage Law: பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்க ஈராக் முடிவு.. பொதுமக்கள் போராட்டம்..!
ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை, 18-யில் இருந்து 9 ஆக குறைக்க அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்துள்ளது.
நவம்பர் 13, பாக்தாத் (World News): மேற்காசிய நாடான ஈராக்கில் ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். அங்கு முகமது ஷியா அல் சுடானி (Mohammed Shia' Al Sudani) பிரதமராக உள்ளார். இந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு, 18 ஆக உள்ளது. கடந்த 1950-யில் குழந்தை திருமணம் தடை (Child Marriage) செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்வதாக, 2023-ஆம் ஆண்டு ஐ.நா., ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. Car Accident In China: கூட்டத்திற்கு நடுவில் தறிகெட்டு புகுந்த கார்; 35 பேர் பரிதாப பலி..!
இந்நிலையில், ஈராக் பெண்களின் திருமண வயதை 18-யில் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்துள்ளது. ஷியா பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிப்பதால், இந்த சட்ட திருத்தம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், பெண்கள் மற்றும் மனித உரிமை குழுக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இளம்பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிக்கும். மேலும், அவர்கள் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.