Japan Earthquake Death: அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் அதிர்ந்துபோன ஜப்பான்; குலுங்கிய சாலைகள்.. 6 பேர் பலி.., 100 வீடுகள் சேதம்.!
இதனால் மனித உயிரிழப்புகளும் இழக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 02, டோக்கியோ (World News): அதிக நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ள நிலநடுத்தட்டுகள் எனப்படும் டெக்டனிக் பிளேட் (Tectonic Plates) மீது அமைந்துள்ள ஜப்பானில், அவ்வப்போது அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படுவது உண்டு. இதனால் அந்நாட்டு மக்கள் தங்களின் வாழ்நாளில், எதிர்கால இழப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
பயங்கர நிலநடுக்கம்: ஜப்பானிய அரசும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனது ஒவ்வொரு கட்டமைப்பையும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாக்கும் விதிமுறைகளின்படி அமைத்து வருகிறது. இதனிடையே, நேற்று ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கமானது (Japan Earthquake) ஏற்பட்டது.
ஆண்டு பிறந்த அன்றே சோகம்: புத்தாண்டு தினமான நேற்று, ஜப்பானில் உள்ள மேற்கு கடற்கரை நகரங்களில், அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் 7.4, 6.3 மற்றும் 7.6 என்ற புள்ளிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் சில நிமிடங்களுக்கு தொடர்ந்த காரணத்தால், பதறிப்போன மக்கள் அலறியபடி வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். Child Died: 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி; பத்திரமாக மீட்கப்பட்டும் நடந்த சோகம்.!
சுனாமி எச்சரிக்கை: வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டு இருந்த கேமிராவில், நிலநடுக்கத்தின் பாதிப்பு காட்சிப்படுத்ப்பட்டது. அதேபோல, இரயில் நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியானது. நிலநடுக்கத்தின் பாதிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் உயர்வான இடங்களை நோக்கி பயணித்தனர்.
6 பேர் உயிரிழப்பு: நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சுனாமி ஏற்படவில்லை எனினும், 1 மீட்டர் உயரத்தில் அலைகள் திடீரென மேலெழும்பி கரையை தாக்கியது. நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமாகின. தற்போது இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஜப்பானில் 6 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள வஜிமா நகரில் குடியிருப்பு பகுதியில் நிலநடக்கத்தை தொடர்ந்து, தீ விபத்தும் ஏற்பட்டது. இதனால் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கு இரையாகின.
நிலநடுக்கத்தின்போது ஜப்பானின் வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட காணொளிகள்: