Gujarat Baby Died Fallen Borwell (Photo Credit: @ANI X)

ஜனவரி 02, துவாரகா (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா மாவட்டம், கல்யாண்பூர், ரான் கிராமத்தில் வசித்து வருபவர் முலா சகாரா. இவருக்கு ஏஞ்சல் சகாரா என்ற இரண்டரை வயதுடைய மகள் இருக்கிறார். முலாவின் குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டி ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர்.

கைவிடப்பட்ட ஆழ்துளைக்கிணறு: ஆனால், வறுமை காரணமாக அவர்களால் மேற்படி இணைப்பை செயல்படுத்த முடியவில்லை. இதனால் ஆழ்துளை கிணற்றின் மேற்பகுதி மீது பிளாஸ்டிக் ஒன்றை வைத்து தற்காலிகமாக மூடி அதனை கைவிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் இரண்டரை வயதுடைய ஏஞ்சல், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றின் பிளாஸ்டிக் மூடி மீது ஏறி நின்றுள்ளார்.

குடும்பத்தினர் கண்முன் துயரம்: அப்போது, திடீரென ஆழ்துளை கிணற்றின் மூடி பாரம் தாங்காமல் உடைந்துவிட, சிறுமி அதற்குள் விழுந்துள்ளார். 130 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் (Baby Died Fallen Borewell), சிறுமி 30 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து, காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. Japan Earthquake and Tsunami Warning: ஜப்பானில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலநடுக்கம்; சுனாமி தாக்கியது... பதைபதைப்பு காட்சிகள் வெளியானது.! 

மீப்புப்பணியில் அதிகாரிகள்: சுதாரித்த அதிகாரிகள் தேசிய மற்றும் மாநில மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்திய இராணுவ அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், இரவு 09:18 மணியளவில் சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

சிகிச்சை பலனின்றி பலி: அவர் தொடர்ந்து மயக்கத்திலேயே இருந்ததால், மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு முலாவின் குடும்பத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமி வீட்டு பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, அவரின் தாயும் அருகிலேயே இருந்துள்ளார். குடும்பத்தினர் கண்முன்னே சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து இருக்கிறார்.