Japan Earthquake: ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாகி பதிவு.. மக்கள் பீதி..!
எறும்புபோல சுறுசுறுப்பு மிக்க மனிதர்களான ஜப்பானியர்கள், தங்களின் நாட்டில் பல பேரிடரை சந்தித்தாலும் அவர்களின் வளர்ச்சி அசுரத்தனமானது.
ஜனவரி 09, டோக்கியோ (World News): உலகிலேயே அதிக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள நிலநடுத்தட்டுகள் மீது அமைந்துள்ள ஜப்பான் நாட்டில், அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. இதனால் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும், மக்களுக்கு ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வகையில் அங்குள்ள கட்டுமான பணிகள் அரசால் அமைக்கப்படுகிறது.
புத்தாண்டிலேயே ஜப்பானிடம் சுயரூபத்தை காண்பித்த இயற்கை அன்னை: உலகமே புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, ஜனவரி ஒன்றாம் தேதி அன்று ஜப்பானில் ஏற்பட்ட மூன்று அதிபயங்கர நிலநடுக்கமானது 1 மீட்டர் அளவிலான சுனாமி அலைகளை ஏற்படுத்தியது. சில இடங்களில் கட்டுமானங்கள் இடிந்து விழுந்து சுமார் 150 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். Suryakumar Yadav Surgery Updates: சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை... மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சோகம்..!
8 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் நிலநடுக்கம்: இந்நிலையில், ஜப்பானில் உள்ள ஹோங்சு மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி உட்பட எந்த எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் நிலநடுக்கத்தை உணர்த்தும் திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்க அதிர்வுகள் நின்றதை தொடர்ந்து அனைவரும் அமைதியாகினர். சேதங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
நள்ளிரவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கங்கள்: அதேவேளையில் நேற்று நள்ளிரவு இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை மையமாக வைத்து அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோலில் 6.3 மற்றும் 7 புள்ளிகளை கடந்து பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.