Indonesia Earthquake: இந்தோனேஷியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. அலறி அடித்து வீதிக்கு ஓடி வந்த மக்கள்..!
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
மார்ச் 21, கிழக்கு ஜாவா (World News): இந்தோனேசியாவின் ஜாவா தீவின் (Java island) அருகே பயங்கர நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.4 அலகுகளாக பதிவானது. கடலுக்கடியில் அந்த நாட்டின் நேரப்படி காலை 11.22 மணிக்கு துபான் ரீஜென்சிக்கு வடகிழக்கே 132 கி.மீ தொலைவில் மையம் கொண்டு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. Inimel Teaser: ஸ்ருதி ஹாசனுடன் ஓவர் ரொமான்ஸ் செய்த லோகி.. "உனக்காடா ரொமான்ஸ் வராதுன்னு சொன்ன.." என கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
மேலும் சுனாமி ஏற்படுவதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுக்கு பயந்து மக்கள் அனைவரும் வீதிகளுக்கு தஞ்சம் அடைந்து ஓடி வந்தனர். இருப்பினும் ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.