Free Visa to Malaysia: மலேஷியா செல்லும் இந்தியர்களுக்கு உற்சாக செய்தி: விசா இல்லாமல் இந்திய மக்களை அனுமதிக்க அறிவிப்பு.!

சீனா மற்றும் இந்திய நாடுகளின் குடியுரிமை பெற்ற மக்கள், இனி டிசம்பர் 01ம் தேதி முதல் விசா இல்லாமலேயே மலேசியாவுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Malaysia PM Anwar Ibrahim | Visa (Photo Credit: X / Pixabay)

நவம்பர் 27, கோலாலம்பூர் (World News): இந்தியாவின் நட்பு நாடாகவும், இலங்கைக்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகளவு வசிக்கும் நாடாகவும் இருப்பது மலேசியா (Malaysia). அங்கு 2.02 கோடி தமிழர்கள் வசித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு சென்றுவர விசா (Visa) முன் விண்ணப்ப பதிவுகள் நடைமுறை இருந்து வருகிறது.

மலேசியாவை பொறுத்தமட்டில் சுற்றுலாத்தலங்கள் மற்றும் வியாபார சந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு அந்நாட்டுக்கு ஆண்டுக்கு 354,486 பேர் பயணித்து வந்தனர். ஆனால், கொரோனாவுக்கு பின் அந்த எண்ணிக்கை என்பது கணிசமாக குறைந்தது.

இதனால் தனது விசா வழங்கும் நடைமுறையை தளர்த்தியுள்ள மலேஷிய அரசு (Free Visa to Malaysia), இந்தியர்கள் மற்றும் சீனர்கள் விசா இன்றி மலேஷியா வந்துசெல்ல அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் ஒருமாதம் வரையில் மலேஷியாவுக்கு சுற்றுலாவுக்கு செல்லலாம். Air India Flight Leak: டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் கசிவு: துணியை வைத்து தற்காலிக தடுப்பை ஏற்படுத்திய பணியாளர்கள்.! 

வரும் டிசம்பர் 01ம் தேதி முதல் இந்நடைமுறை அமல்படுத்தப்படும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருக்கிறார். மலேஷியாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால், அதேவேளையில் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பயணித்து, சுற்றுலாப்பயணிகள் வாயிலாக உள்நாட்டு வருவாய் பெருகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், சுற்றுலா விசாவில் மலேஷியா சென்று வேலை பார்க்க நினைப்பவர்கள், இலவச விசாவில் மலேஷியா செல்ல நினைத்து ஏமாறவேண்டாம். இதனை பல போலி நிறுவனங்கள் தனக்கான வாய்ப்பாகவும் பயன்படுத்தும் என்பதால், மலேஷியா சென்று வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து இலட்சக்கணக்கில் பணம் கொடுப்போர் உஷாராக இருப்பது நல்லது.