Air India Flight Lekage (Photo Credit: X)

நவம்பர் 27, லண்டன் (World News): டெல்லியில் (Delhi) உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலண்டனில் உள்ள காட்விக் (London Gatwick Airport LGW) விமான நிலையம் நோக்கி, நேற்று ஏர் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான B787 விமானம், தனது பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

விமானம் நடுவானில் பயணிக்கும்போது, திடீரென விமானத்தின் டேங்க் நிரம்பி கசிவு ஏற்பட்டதாக தெரியவருகிறது. இந்த நீர் பயணிகள் அமர்ந்த இருக்கைக்கு நடுவே விழுந்துள்ளது. HBD Suresh Raina: கிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன்., தோனியின் நண்பன்.. சின்ன தல சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.! 

இதனால் பயணிகள் அசௌகரியத்தை உணர்ந்த நிலையில், விமான பணியாளர்கள் தற்காலிக்காக கசிவு வரும் இடங்களுக்கு மேலே துணிகளை கட்டி வைத்தனர்.இந்த விஷயம் தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

டெல்லியில் இருந்து லண்டன் செல்வதற்கு கிட்டத்தட்ட 9 மணிநேரம் பயணம் மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் புறப்படும் விமானம் 6,700 கி.மீ தூரத்தை கடந்து இலண்டனை சென்றடைகிறது. இவ்வாறான நீண்ட பயணத்தில், விமானத்திலேயே பயணிகளுக்கு இவ்வாறான அசௌகரிய சூழ்நிலைகள் ஏற்படுவது ஏர் இந்தியாவின் செயல்பாடுகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.