Marburg Virus Scare: வேகமாக பரவும் மார்பர்க் வைரஸ்.. மிரளும் உலக நாடுகள்..!

மார்பர்க் வைரஸ் பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பயணிகளால் ஜெர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தை மூடப்பட்டுள்ளது.

Marburg Virus (Photo Credit: Pixabay)

அக்டோபர் 03, பெர்லின் (World News): மார்பர்க் வைரஸ் (Marburg Virus) நோய் மார்பர்க் ரத்தக்கசிவு காய்ச்சல் என்று முன்பு அழைக்கப்பட்டது. இந்த தொற்று மனிதனுக்கு பரவ ஆப்பிரிக்க பச்சை குரங்குகள் தான் காரணம் என்றும் உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான வெளவால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. 1967ல் ஜெர்மனியில் மார்பர்க் மற்றும் பிராங்க்பேர்ட்டில் ஒரே நேரத்தில் இது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 2022இல் மீண்டும் கண்டறியப்பட்டது. ஆனால் அப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் மீண்டும் ஜெர்மனியில் பரவ ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமின்றி மார்பர்க் வைரஸ் பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பயணிகளால் ஜெர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தை மூடப்பட்டுள்ளது.

மார்பர்க் வைரஸ் அறிகுறிகள்: வைரஸ் உடலில் நுழைந்த 2 முதல் 21 நாட்களுக்குள், அதிக காய்ச்சல், தசைவலி மற்றும் கடுமையான தலைவலி போன்ற வடிவங்களில் வெளிப்படும். 3வது நாளில் நோயாளிகளுக்கு வயிற்று வலி, வாந்தி, கடுமையான நீர் வயிற்றுப்போக்கு மற்றும் தசைப்பிடிப்பு இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நோயாளிகளின் தோற்றம் கண்கள் ஆழமாக புதைந்தது போல் இருப்பது வெளிப்பாடற்ற முகங்கள் மற்றும் தீவிர சோம்பல் ஆகியவற்றுடன் சொல்லலாம். Man Lifts His Wife: "எனக்கு என் மனைவி வேண்டும்.." அமர்க்களம் அஜித் போன்று மனைவியை தூக்கிச் சென்ற கணவன்..!

நோய் தாக்கப்பட்ட 5 முதல் 7 நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் மூக்கு, ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு மற்றும் வாந்தி மற்றும் மலத்தில் இரத்தம் தோன்றுவதாகவ்ம் சொல்லப்படுகிறது. கடுமையான இரத்த இழப்பு மரணத்தை உண்டு செய்யலாம். மார்பர்க் வைரஸ் தடுப்பு சிகிச்சை என்று எதுவும் இல்லை. சரியான கவனிப்புடன் அதை நிர்வகிக்க முடியும். உலக சுகாதார நிறுவனத்தின் படி வாய்வழி அல்லது நரம்புவழி திரவங்களுடன் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது மரணத்தை தடுக்க உதவும்.