Miss Universe 2024: மிஸ் யுனிவர்ஸ் அழகிப்பட்டம் வென்ற டென்மார்க் அழகி..! 21 வயதில் மாபெரும் சாதனை.!

21 வயது இளம்பெண், மிஸ் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு டென்மார்க் மண்ணுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.

73rd Miss Universe 2024 Victoria Kjaer (Photo Credit: Instagram)

நவம்பர் 17, மெக்சிகோ (World News): மெக்சிகோ நாட்டில் 73வது உலக அழகி () போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அழகிகளும் கலந்துகொண்ட நிலையில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் விக்டோரியா கஜேர் (Denmark's Victoria Kjaer) தேர்வு செய்யப்பட்டார். உலகளவில் 125 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் முதல் முறை வெற்றி அடைந்தார். இந்தியாவின் சார்பில் ரேகா சிங்கா (Rhea Singha) கலந்துகொண்டார். வெற்றியாளரைத் தொடர்ந்து, முதல் ரன்னராக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சிடிம்மா அடெஸ்ஷினா, இரண்டாவது ரன்னராக மெக்சிகோவைச் சேர்ந்த மெரினா பெர்னாண்டா பெல்ட்ரன் தேர்வு செய்யப்பட்டார். Riya Evicted? பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியியேறினார் ரியா? ஜாக்குலினை வறுத்த விஜய் சேதுபதி.. ப்ரோமோ உள்ளே.!

யார் இந்த விக்டோரியா?

டேனிஷ் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் பணியாற்றி வரும் விக்டோரியா, 21 வயதில் தனது நாட்டுக்காக முதல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 21 வயதில் பெற்றுக்கொடுத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு டென்மார்க்கில் உள்ள சோபோர்க் பகுதியில் பிறந்தார். வழக்கறிஞராக முடிவெடுத்து பட்டம் பயின்றவர், மனநல ஆரோக்கியத்திற்கு ஆலோசனை வழங்கும் நபராகவும் இருக்கிறார். விலங்குகள் நல ஆர்வலராகவும், அழகுக்கலை நிபுணராகவும் இருந்து வருகிறார்.

மிஸ் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட விக்டோரியா:

 

View this post on Instagram

 

A post shared by Miss Universe (@missuniverse)