New York Mayor Celebrates Diwali: அமெரிக்க வாழ் இந்துக்களுடன், கோவிலில் தீபாவளியை சிறப்பித்த நியூயார்க் மேயர்.!
தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, உலகெங்கும் பெருவாரியாக வாழ்ந்து வரும் இந்து மக்களுக்கு, அந்நாட்டு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நவம்பர் 13, நியூயார்க் (World News): உலகம் முழுவதும் இந்து மத மக்களால் தீபாவளி பண்டிகையானது வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படுகிறது. இன்று மற்றும் நாளை வடமாநிலங்களில் அயோத்திக்கு ஸ்ரீ ராமர் தனது மனைவி சீதாதேவி மற்றும் சகோதரர் இலக்குவன் ஆகியோருடன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக சிறப்பிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, உலகெங்கும் பெருவாரியாக வாழ்ந்து வரும் இந்து மக்களுக்கு, அந்நாட்டு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்து இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். ஆகையால், அங்குள்ள சில மாகாணங்களில் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. Karnataka Shocker: தாய், 3 குழந்தைகள் என ஒரேகுடும்பத்தை சேர்ந்த நால்வர் கொடூரமாக வெட்டிக்கொலை; கர்நாடகாவில் பயங்கரம்.!
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் (New York City Mayor Eric Adams), அங்குள்ள மன்ஹாட்டன் இந்து கோவிலில் (Manhattan Hindu Temple) வைத்து, இந்து மத மக்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார். 1500 மக்களுடன் அவர் தீபாவளி பண்டிகையை சிறப்பித்தார். இது அழகிய தருணம் எனவும் ஆடம்ஸ் தனது மகிழ்ச்சியை விவரித்தார்.