Udupi Murder Family Members Visual (Photo Credit: X)

நவம்பர் 13, உடுப்பி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி (Udupi, Karnataka) மாவட்டம், திரிபதி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் முகம்மது நூர். இவர் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். நூரின் மனைவி ஹசீனா (வயது 47).

தம்பதிகளுக்கு அர்பான் (வயது 23), அயனஸ் (வயது 21), அசீம் (வயது 14) என 3 குழந்தைகள் இருக்கின்றனர். நூர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், ஹசீனாவின் தாயார் ஹாஜிரா (வயது 70) மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில், இவர்களின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஹசீனா மற்றும் அவரின் 3 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து தப்பிச்சென்றார். ஹாஜிரா மட்டும் மர்ம நபரின் தாக்குதலில் இருந்து தப்பி, கழிவறைக்குள் சென்று உதவிகேட்டு அலறியுள்ளார். MSD Celebrates Diwali: குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய மகேந்திர சிங் தோனி; அசத்தல் கிளிக்ஸ் இதோ.! 

இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துவிடவே, மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். 15 நிமிடங்களில் 4 உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், குடும்பத்தினர் நால்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டன.

Udupi Murder (Photo Credit: X)

அப்போது, குற்றவாளி ஆட்டோவில் வந்து இறங்கி சென்றது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநர் குற்றவாளியின் விபரீதம் தெரியாமல், அவர் கூறிய தெருவில் சம்பந்தப்பட்டவரை இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் ஷியாமிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் இரவு 08:30 மணிக்கு குயின்ஸ் சாலை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, ஆட்டோவை அழைத்துக்கொண்டு கொலை நடத்தப்படவேண்டிய வீட்டிற்கு சென்றுள்ளார். Hawaii Pond turned Pink: ஹலோ பாக்டீரியா அதிகரிப்பால், பிங்க் நிறத்தில் மாறிய குளம்: அதிசியம்போல பார்க்க குவியும் மக்கள்..! 

பின்னர், மீண்டும் 30 நிமிட இடைவெளிக்குள் ஆட்டோ ஸ்டாண்டுக்கு திரும்பி, மற்றொரு ஆட்டோ ஓட்டுனரை அழைத்துக்கொண்டு தனது வாகனம் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து தப்பியும் சென்றுள்ளார்.

தான் அழைத்துச்சென்ற சவாரியை பயன்படுத்தியவர் 30 நிமிடத்திற்குள் அவசர அவசரமாக திரும்பி வந்து மற்றொரு ஆட்டோவில் பயணித்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஏதும் பிரச்சனையா? என கேள்வி எழுப்பியபோது, ஒன்றும் இல்லை என சாதரணமாக கூறி சென்றுள்ளார். ஆட்டோ ஓட்டுனரின் சந்தேகம் தீருவதற்குள் கொலை சம்பவம் அம்பலமாகியுள்ளது.

தற்போது காவல் துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர். அவர் கைதானால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.