Israel Hamas War: இஸ்ரேலின் தாக்குதலில் ஐநா தொண்டு பணியாளர்கள் ஐவர் பலி; இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அதிர்ச்சி சம்பவம்..!

எல்லை தாண்டி வந்த ஹமாஸ் குழுவினர் செய்த கொடூர செயல்களால், இன்று அவர்கள் வாழ்ந்த பகுதி ஒட்டுமொத்தமாக தரைமட்டமாக்கப்பட்டு வரும் துயரம் அவர்களின் கண்முன் நடக்கிறது.

Israel Gaza Strip Attack (Photo Credit: @sirajnoorani X)

ஏப்ரல் 02, காசா (World News): கடந்த 2023 அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. வரலாற்றில் தான் இழந்த பகுதியை மீட்டெடுக்க போவதாக மத்திய கிழக்கு நாடுகளின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவுடன் களமிறங்கிய ஹமாஸ் (Israel Hamas Conflict) போராளிகள் குழு, தற்போது இஸ்ரேல் கொடுக்கும் மரண அடியை எதிர்கொள்ளையில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், போரை தொடங்கிய பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து, இஸ்ரேல் முழு வீச்சில் இராணுவத்தை பயன்படுத்தி வருவதால் பாலஸ்தீனிய நகரம் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது.

குண்டுவீச்சு தொடருகிறது: ஹமாஸ் (Hamas Group) பயங்கரவாதிகள் போரின் தொடக்கத்தில் நடத்திய தாக்குதலில் 1400 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொடூரமாக தலை வெட்டி, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பதில் தாக்குதலில், தற்போது வரை 32,000 க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக தங்களது உயிரை இழந்துள்ளனர். இன்று வரை போர் ஓயாத நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் குண்டு வீச்சுகள் தொடர்ந்து வருவதால் மக்கள் ஐநா பாதுகாப்பு முகாம்களில் தங்கி இருக்கின்றனர்.

இஸ்ரேல் அதிபர் திட்டவட்டம்: உலக நாடுகள் பாலஸ்தீனியத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வருகிறது. இஸ்ரேல் தரப்பில் முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்றதால், போரின் தொடக்கத்தில் ஆதரவளித்த அமெரிக்காவும் இஸ்ரேலை தற்போது கண்டித்து வருகிறது. போரை நிறுத்த ஐ.நா மன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் பயங்கரவாதிகள் செய்த கொடூர கொலைகளை ஒருபோதும் எங்களால் மன்னிக்க முடியாது. அவர்களை வேரறுக்கமால் நாங்கள் இஸ்ரேல் மண்ணுக்கு எங்களது படைகளை திருப்ப மாட்டோம் என்ற ஒற்றை கோரிக்கையுடன் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறார். Car Rammed into Shop CCTV Video: கடைக்குள் புகுந்த கார்; பெண்ணை தேடி பரிதவித்த நபர்.. பதறவைக்கும் சம்பவத்தில் பரவசமடைந்த காதல்..! 

Israel Army Spot on Palestine Border Near Gaza Strip (Photo Credit: @ANI, Reuters Twitter)

வான்வழி தாக்குதல்: இவ்வாறான சூழலால் பாலஸ்தீனத்தில் இருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் மக்கள், அங்கேயே முகாம்களில் தங்கி இருக்கும் சூழலும் உண்டாகி இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டம், மத்திய கிழக்கில் பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்நிலையில், தற்போது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அங்குள்ள மக்களுக்கு தொண்டு செய்ய சென்ற நபர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஐநா ஊழியர்கள் பலி: காசாவில் உள்ள மேற்கு தேயிற் அல்-பலாஹ் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், ஐநாவுக்கு சொந்தமான வாகனம் இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் சம்பந்தப்பட்ட வாகனத்தில் பயணம் செய்த ஐந்து வெளிநாட்டவர்களான ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் மற்றும் போலீஸ், ஐரிஷ் ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement