Thiruvalluvar Chair at Malaysian University: "மலேஷிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை" - இந்தியா & மலேஷிய பிரதமர்கள் அறிவிப்பு.!
ஐடிஇசி உதவித்தொகையின்கீழ் சைபர் பாதுகாப்பு, ஏஐ பிரிவுகளில் 100 மலேஷிய மாணவர்கள் கல்வி பயில வாய்ப்புகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி மலேஷிய பிரதமரிடம் உறுதியளித்து இருக்கிறார்.
ஆகஸ்ட் 20, புதுடெல்லி (New Delhi): மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim), அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று குடியரசு தலைவரின் இல்லத்தில், அவருக்கு அரசுமுறைப்படி உரிய மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) - மலேஷிய பிரதமர் அன்வர் ஆகியோர் கலந்துகொண்ட உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, அனைத்து துறைகளிலும் இந்திய நிறுவனத்துடன் மலேஷிய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மேலும், உணவு பாதுகாப்பு, எரிசக்தி துறைகளில் முக்கியமாக இணைந்து பணியாற்றவும் திட்டமிடப்பட்டு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன. Man Beats Father To Death: மசாஜ் செய்து விடாத தந்தை.. ஆத்திரத்தில் கொலை செய்த மகன்..!
திருவள்ளூர் இருக்கை அமைக்க நடவடிக்கை:
இதில் முக்கியமானதாக மலேஷியாவில் உள்ள பல்கலை.,யில் திருவள்ளூர் இருக்கைக்கு உரிய ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன. இரண்டு நாட்டு அரசுகளும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கான படிவங்கள் பரிமாறப்பட்டு கையெழுதிப்பட்டன. பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "மலேஷியாவில் உள்ள தும்கோ அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில், ஆயுர்வேத இருக்கை ஏற்படுத்தப்படும். மலேஷிய பல்கலை.,யில் திருவள்ளூர் இருக்கை அமைக்கப்படும். இந்த சிறப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் அவருக்கு நன்றி. ஐடிஇசி உதவித்தொகையின்கீழ் சைபர் பாதுகாப்பு, ஏஐ பிரிவுகளில் 100 இடங்களில் மலேஷியர்களுக்கு என பிரத்தியேகமான இடம் ஒதுக்கீடு செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் இருக்கை குறித்து பிரதமர் பேசியது: