PM Modi To Visit Ukraine and Poland: இந்திய பிரதமர் மோடி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பயணம்..!
பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆகஸ்ட் 20, புதுடெல்லி (New Delhi): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்து இருந்தார். Jammu Kashmir Earthquake: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு..!
இதனிடையே, 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாதம் ரஷ்யா சென்றார். இந்த நிலையில், நாளை (ஆகஸ்ட் 21) போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அதன்பின்னர் வரும் 23-ஆம் தேதி போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிலுள்ள சில பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை (Ukrainian President Zelensky) பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பின் உக்ரைன் செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்றும், 45 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து நாட்டிற்கும் பயணம் மேற்கொள்வது என்பதும் குறிப்பிடத்தக்கது.