Earthquake (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 20, ஸ்ரீநகர் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா (Baramulla) பகுதியில், இன்று (ஆகஸ்ட் 20) காலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. இதில் முதல் நிலநடுக்கம் ரிக்டரில் (Richter Scale) 4.7 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பாரமுல்லாவை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் 5 மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. Man Beats Father To Death: மசாஜ் செய்து விடாத தந்தை.. ஆத்திரத்தில் கொலை செய்த மகன்..!

சேதம் மற்றும் உயிரிழப்பு பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதிகாரிகள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும், ஏதேனும் நில அதிர்வுகள் ஏற்பட்டால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.