Moscow Terror Attack: ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக நடைபெறும் விசாரணை; ரஷிய படையினரின் அதிர்ச்சி செயல் அம்பலம்.!
133 பேரின் உயிரை பறித்த ரஷிய பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை, அந்நாட்டு முறைப்படி அதிகாரிகள் கடுமையாக விசாரித்து வருகின்றனர்.
மார்ச் 25, மாஸ்கோ (World News): ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ, கான்செர்ட் ஹாலில் வைத்து கடந்த 21ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 133 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாதிகளின் சதிச்செயல் குறித்து அமெரிக்கா எச்சரித்திருந்தபோதிலும், அதிகாரிகளிடம் சிக்காமல் தலைநகர் வரை சென்றவர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். கண்ணில் படுவோரையெல்லாம் சுட்டு வீழ்த்தியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். JP Nadda Wife SUV Stolen: பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா மனைவியின் பெயரில் உள்ள கார் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை..!
விசாரணையில் தீவிரமாக ஈடுபடும் அதிகாரிகள்: இந்த சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, ரஷிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு உதவியதாக அல்லது சம்பவத்தில் தொடர்புடையவராக 10 பேர் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கிய காட்சிகளை வீடியோவும் எடுத்து வெளியிட்டு இருந்தனர். குற்றச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் விரைவில் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். Fire on Temple: ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சோகம்; ஆராதனையில் ஏற்பட்ட தீ விபத்தால், 13 பேர் படுகாயம்.!
ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சி விசாரணை: இந்நிலையில், இக்குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்சுதீன் பரிதுன் (Shamsuddin Fariddun) என்ற நபரிடம், ரஷிய பாதுகாப்பு படையினர் விசாரிக்கும் காட்சி வெளியாகி இருக்கிறது. ஆணுறுப்பு மற்றும் உடலில் 80 வோல்ட் அளவிலான மின்சாரத்தை பாய்ச்சி ரஷிய அதிகாரிகள் கொடூரமான வகையில் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இவர் கஜகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல, சைதாக்ரமி முரடலி ராசபலிசோடா என்பவரின் காதுகளை தனியே வெட்டி எடுத்து, அதனை சாப்பிடச்சொல்லி வாயில் திணித்து கொடுமைப்படுத்தியதும் நடந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது வரை டேலர்ட்ஜோன் மிர்சோயேவ் (வயது 32), சைதாக்ரமி ரச்சபலிசோடா (வயது 30), முகமதுசோபிர் ஃபைசோவ் (வயது 19), ஷம்சுதீன் ஃபரிதுன் (வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.