Russian Wagner: புதினுக்கு எதிராக திரும்புகிறது ரஷிய துணை இராணுவப்படை?.. விரைவில் ரஷியாவுக்கு புதிய அதிபர்.. உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி.!
களத்தில் இருக்கும் படைகளுக்கு சரிவர ஆயுத விநியோகம் செய்யாததன் விளைவாக ரஷிய துணை இராணுவ படை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.
ஜூன் 24, மாஸ்கோ (Moscow): ரஷியா உக்ரைனின் மீது அதிகாரபூர்வமாக படையெடுத்து சென்று ஓராண்டுகள் கடந்துவிட்டன. ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு அமைப்பான நேட்டோ படைகளுடன் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து, பிராந்திய பாதுகாப்பு கருதி ரஷியா தனது பழைய ஆளுமைக்குட்பட்ட பகுதியான உக்ரைனின் மீது படையெடுத்து சென்றுள்ளது.
இந்த படையெடுப்பினால் ரஷியாவின் மீது பனிப்போர் கொண்டிருந்த அமெரிக்காவும், தனது நட்பு நாடுகளான இங்கிலாந்து உட்பட பிற நாடுகளுடன் சேர்ந்து ஐ.நா சபையில் இருந்து ரஷியாவை வெளியேற்றும் முயற்சி, பொருளாதார தடை என பல விஷயங்களை மேற்கொண்டது. உக்ரைனுக்கு பணம் & இராணுவ தளவாட உதவிகளை வழங்கி வருகிறது. HC on Husband-Wife and Another Lady: வேறொரு பெண்ணோடு உறவுவைத்து மனைவியை தன்னுடன் வசிக்க கணவன் வற்புறுத்த முடியாது – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
தனது படைகளை வைத்து உக்ரைன் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிவெடுத்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொடர்ந்து அதனை செயல்படுத்தி வருகிறார். இன்று வரை எரிபொருள் விவகாரத்தில் ரஷியாவையே ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் படையெடுப்புக்கு பின் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு பல தடைகளை வழங்க உத்தரவிட்டது.
எவை எப்படி இருப்பினும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது முடிவில் இருந்து பின்வாங்காமல் நேட்டோ படைகளுடன் இணைய முயன்று வருகிறார். ஆனால், உக்ரைனை ஐரோப்பிய நாடுகள் நேட்டோ படையில் இணைத்தாலோ, நேரடியாக வேறொரு நாடு உக்ரைன் களத்திற்கு ரஷியாவுக்கு எதிராக வந்தாலோ போரில் அடுத்த உச்சகட்ட நிலைக்கு செல்ல ஒருதுளியளவுக்கு கூட தயங்கமாட்டோம் என ரஷியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. Sundar Pichai: டிஜிட்டல் இந்தியாவுக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு – பிரதமரை சந்தித்தபின் சுந்தர் பிச்சை அறிவிப்பு.!
இதனால் போர் மூண்டுள்ள மண்ணில் உக்ரைன் நாட்டுக்கு ஐரோப்பியா வழியே ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டாலும், அவற்றுடன் இணைத்து வேறு நாடுகள் போர் புரிவதில்லை. தொடர்ந்து ரஷியாவில் போரினை வைத்து பல பிரச்சனைகள் நடந்து வருகின்றன. ரஷ்யாவின் தரப்பில் பலத்த இழப்பு ஏற்பட்டாலும், அவர்களின் முடிவில் உறுதிபட இருக்கின்றனர்.
போர் தொடங்கிய நாட்களில் இருந்து ரஷிய துருப்புகளில் துணை இராணுவ படையினர் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துவிட்டனர். 2000 டாங்கிகள் சேதமடைந்துவிட்டன. பல போர் விமானங்கள் இழக்கப்பட்டுள்ளன. இவை ஒருபும் இருப்பினும், ரஷியா தனது இறுதிக்கட்ட ஆயுதமான அணு ஆயுதத்தை பெலாரசுக்கு முன்னதாகவே அனுப்பி வைத்துவிட்டது. TCS Job Scandal: வேலை வாங்கித்தர கமிஷன்; ரூ.100 கோடி பணத்தை முறைகேடாக சம்பாதித்த TCS நிர்வாகிகள்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
ஏதேனும் ஒரு சூழலில் போர் தீவிரமடையும் பட்சத்தில் வெளிப்படையாக ரஷியா அணு ஆயுதத்தை உக்ரைன் மண்ணில் பயன்படுத்தும் என்பதை உலக நாடுகளுக்கு வெளிக்கொணரவே ரஷியா அணு ஆயுதத்தை அனுப்பி வைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷியாவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் நடைபெற்று வரும் போரின் காரணமாக, களத்தில் இருக்கும் துணை இராணுவத்திற்கு அனுப்ப வேண்டிய ஆயுதங்கள் சரிவர அனுப்பப்படுவதில்லை என்று தெரியவருகிறது. இதனால் Wagner என்று அழைக்கப்படும் துணை இராணுவ தரப்பு ரஷியாவுக்கு எதிராக திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. HC on Minor Girl Having Sex: 16 வயது சிறுமி பாலியல் ரீதியாக உணர்வுபூர்வ முடிவு எடுக்கலாம் – போக்ஸோ வழக்கில் காதலன் விடுதலை..!
இந்த சூழலை மெய்படுத்தும் பொருட்டு Wagner-உடன் இணைக்கப்பட்ட டெலகிராம் குழுவில், புதின் தவறு செய்துவிட்டதாகவும், விரைவில் நாங்கள் புதிய ஜனாதிபதியை பெறுவோம் என்றும், அவரின் தவறான செயல் மிகவும் மோசமானது எனவும் தகவல் பகிரப்பட்டுள்ளது. இது போரில் ரஷ்ய துருப்புகளை தொய்வடைய வைக்க எதிரணி செய்யும் சதியா? அல்லது Wagner துணை இராணுவ துருப்பு போரினால் மனதளவில் வலுவிழந்து நாட்டுக்கு எதிராக திரும்புகிறதா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.