Spain Forest Fire: ஸ்பெயினின் கேனரி தீவுகளில் பரவத்தொடங்கியது காட்டுத்தீ; மக்கள் அவசர கதியில் வெளியேற்றம்..!
தற்போது ஐரோப்பிய நாடுகளும் அதன்பிடியில் சிக்கி இருக்கின்றன.
ஆகஸ்ட் 17, கேனரி தீவுகள் (World News): இத்தாலி, ஸ்பெயின் உட்பட ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதமாக புவி வெப்பமடைதல் (Global Warming) காரணமாக கடுமையான வெயில் மக்களை வாட்டிவதைத்து வருகிறது. அமெரிக்காவை தொடர்ந்து வடக்கு ஆசிய பகுதிகள், ஐரோப்பிய நாடுகள் கடும் வெயில் (Heat Wave) பிரச்சனையை சமீபத்தில் எதிர்கொண்டு வருகிறது.
இதன் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் (European Countries Forest Fire) பல இடங்களில் காட்டுத்தீ பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனை அணைக்கும் பணிகளில் மீப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் அவசர கதியில் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு (முகாம்களுக்கு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஸ்பெயினில் 22 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியர்களாகிய நமக்கு 22 டிகிரி வெப்பம் பெரிதளவு கருதப்படாது எனினும், அங்கு உள்ள இயல்பான வெப்பநிலையை ஒப்பிடும்போது அவர்களுக்கு அதிகம். ஸ்பெயினில் (Spain Summer Season) ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கோடைகாலம். Trending Video: அடேய் சோணமுத்தா போச்சா?; டூவீலரில் கெத்து காட்ட நினைத்து, தோழியோடு விழுந்து வாரிய இளைஞர்… ட்ரெண்டிங்கில் வீடியோ.!
இந்த காலங்களில் வெப்பம் அதிகபட்சமாக 23 டிகிரி வரை பதிவாகும். அட்லாண்டிக் பெருங்கடலில் நிலவும் காலநிலையை பொறுத்து சிலநேரம் 40 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புகளும் உள்ளன. ஸ்பெயினின் நாடுகளை பொறுத்தமட்டில் இயல்பு வெப்பநிலை என்பது 8 டிகிரி செல்ஸியஸ் முதல் 23 டிகிரி வரை ஆகும்.
குளிர்காலத்தில் (Winter Season) 8 டிகிரி குளிரில் இருக்கும் மக்கள், கோடையில் 23 டிகிரி வெப்பத்திற்கே தாங்க இயலாமல் தவிர்ப்பார்கள். கிட்டத்தட்ட ஊட்டியின் நிலை என்பது ஸ்பெயின் நாட்டில் உள்ள மக்களிடையே இருக்கும். இந்நிலையில், ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகள், டெனெரிபி (Tenerife, Canary Island, Spain) பகுதிகளில் காட்டுத்தீ பரவியுள்ளது.
இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அத்தீவுகளில் இருக்கும் கிராமங்களில் வசித்து வரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலரும் முகாமை நோக்கி விரைந்துகொண்டு இருக்கின்றனர்.
24 மணிநேரத்தில் காட்டுத்தீ 1800 ஹெக்டேர் நிலங்களில் இருந்த மரங்களை அளித்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் 14 விமானங்கள், 200 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா, பிரேசில், கலிபோர்னியா காட்டுத்தீ கடந்த ஆண்டுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தின. தற்போது ஐரோப்பிய நாடுகளும் அதன்பிடியில் சிக்கி இருக்கின்றன.