Kidney Stone Guinness Record: அம்மாடியோவ்... உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரக கல் அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்; கின்னஸ் சாதனையில் பதிவு..!

ஓய்வுபெற்ற இராணுவ வீரரின் வயிற்றில் இருந்த சிறுநீரக கல் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.

Kidney Stone Guinness Record (Photo Credit: Twitter)

ஜூன் 16, இலங்கை (SriLanka News): ஸ்ரீலங்கா நாட்டில் உள்ள கொலோசால் (Colossal, SriLanka) பகுதியை சேர்ந்த, 62 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கனிஸ்டஸ் குங்க்கே (Canistus Coonghe). இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருந்துள்ளது.

இதனையடுத்து, அதனை அறுவை சிகிச்சை மூலமாக நீக்க, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தார். அங்கு மருத்துவர்கள் X-Ray மூலமாக சோதிக்கையில் மிகப்பெரிய சிறுநீரக கல் இருந்தது உறுதியானது. Girl Raped on Running Train: ஓடும் இரயிலில் 20 வயது மாணவிக்கு கதறக்கதற நடந்த பயங்கரம்; 40 வயது கூலித்தொழிலாளி வெறிச்செயல்.! 

அதனை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெளியே எடுத்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Kidney Stone X-Ray Visual (Photo Credit: Twitter)

இந்நிலையில், அவரின் சிறுநீரக கல் உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரக கல் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. அதாவது, அவரின் வயிற்றில் இருந்து 13.37 செ.மீ (5.26 இன்ச்) X 10.55 செ.மீ (4.15 இன்ச்) அளவுள்ள சிறுநீரக கல் எடுக்கப்பட்டது. இதன் எடை 800 கிராம் (1.76 lb) ஆகும்.

முதியவரின் சிறுநீரக கல் முந்தைய 2 சிறுநீரக கற்கள் பெற்ற சாதனையை பின்னுக்கு தள்ளி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.