Russia President Election: ரஷ்யாவில் அதிபர் தேர்தல்.. இன்று முதல் மூன்று நாட்களுக்கு வாக்குப்பதிவு..!

ரஷ்யாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

Russia President Election (Photo Credit: Pixabay)

மார்ச் 15, மாஸ்கோ (World News): ரஷ்யாவின் (Russia) அதிபராக விளாடிமிர் புதின் (Vladimir Putin) சுமார் 20 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார். புதினின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு அதிபர் தேர்தல் (President Election) நடைபெற உள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. Mamata Banerjee Injury: மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கினார்; இரத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!

அதிபர் தேர்தலில் புதின் சுயேட்சையாக போட்டியிடுகிறார். புதினை எதிர்த்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 3 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் சுமார் 11.4 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். சில இடங்களில் அங்கு வீடுகளுக்கே சென்று வாக்கினை அதிகாரிகள் பெற உள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் அதிபராக புதின் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.