மார்ச் 14, கொல்கத்தா (West Bengal News): மேற்குவங்கம் மாநில முதல்வராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) பொறுப்பு வகித்து வருகிறார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்பட்ட மேற்குவங்கத்தை தற்போது தனது முழு கட்டுப்பாட்டில் இவர் வைத்துள்ளார். அதற்கு சாட்சியாக கடந்த 2 தேர்தலில் அடுத்தடுத்து வெற்றி அடைந்து தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்து இருக்கிறார். NPCI Grants Approval to Paytm: பேடிஎம் பயனர்களுக்கு உற்சாக செய்தி.. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அனுமதி.. விபரம் இதோ - என்பிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மருத்துவமனையில் அனுமதி: இந்நிலையில், மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கி கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இவர் எப்படி விபத்தில் சிக்கினார் என்பது குறித்த விபரம் இல்லை. வீட்டில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. TN Weather Report: தமிழகத்தில் அடுத்த வாரம் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்..!
மாநிலத்தில் அரசியல் பரபரப்பு: இந்த சம்பவத்தால் அம்மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. மேலும், இதனை தேர்தல் நாடகம் எனவும் அங்குள்ள அரசியல் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். தற்போது அம்மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதற்கான பணிகளை விறுவிறுப்புடன் மேற்கொண்டு வருகிறது. 2026ல் அங்கு மாநில பொதுத்தேர்தலும் நடைபெறுகிறது.
Our chairperson @MamataOfficial sustained a major injury.
Please keep her in your prayers 🙏🏻 pic.twitter.com/gqLqWm1HwE
— All India Trinamool Congress (@AITCofficial) March 14, 2024