Japan Earthquake: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Earthquake (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 24, டோக்கியோ (World News): ஜப்பானில் இன்று (செப்டம்பர் 24) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் (Tectonic Plates) மேல் ஜப்பான் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவில் ஏற்படுகிறது. ஜப்பானில் மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நடைமுறைகள் காரணமாக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகின்றது. PM Modi Meets Ukrainian President Zelensky: உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் இசு, ஒகசவாரா தீவுகளுக்கு சுனாமி (Tsunami) எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் தீவில் வசித்து வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.