PM Modi Meets Ukrainian President Zelensky (Photo Credit: @ANI X)

செப்டம்பர் 24, நியூயார்க் (World News): இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு (Quad Summit), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்காவின் டெலாவாரேயில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi), 21ம் தேதி அமெரிக்கா சென்றார். குவாட் உச்சி மாநாட்டில் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் இரண்டு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. அவை, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆகியவை ஆகும்.

மேலும் மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் 297 பழங்கால சிலைகளை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்து உள்ளது. அந்த வகையில் 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 578 சிலைகள் அங்கிருந்து திரும்ப பெறப்பட்டு உள்ளன. இதற்கிடையே, நியூயார்க்கில் உலகின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். Sundar Pichai: "ஏஐ குறித்த தெளிவான பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார்" கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை..!

உக்ரைன் அதிபருடன் சந்திப்பு: பிரதமர் மோடி நியூயார்க்கிலிருந்து இந்தியா கிளம்புவதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் (President Volodymyr Zelensky) சந்தித்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி, 2024 செப்டம்பர் 23 அன்று நியூயார்க்கில் எதிர்கால உச்சிமாநாட்டிற்கு இடையே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த இரு தலைவர்களும், இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவது குறித்து திருப்தி தெரிவித்தனர்.

உக்ரைனின் நிலைமை மற்றும் அமைதிக்கான பாதையைப் பின்பற்றுவதற்கான முன்னோக்கிய பாதை ஆகியவையும் அவர்களின் விவாதங்களில் முக்கியமாக இடம்பெற்றன. ராஜதந்திரம், பேச்சுவார்த்தை மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இடையேயான ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியாவின் தெளிவான, நிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். மோதலுக்கு நீடித்த மற்றும் அமைதியான தீர்வை ஏற்படுத்துவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். மூன்று மாதங்களில் இரு தலைவர்களுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு இதுவாகும். இரு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: