Indian Students Death: அருவியில் குளித்த போது நேர்ந்த சோகம்; 2 இந்திய மாணவர்கள் பலி..!
அவர்களின் உடல்களை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 19, லண்டன் (World News): ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த்ஷயரில் ஆறுகள் இணையும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் (Linn Of Dummel) எனும் இடத்திற்கு சிலர் சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலை அங்கு சென்ற சிலர் அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்துள்ளனர். இதில், இந்தியாவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் திடீரென ஆற்றில் தவறி விழுந்து மூழ்கியுள்ளனர். Benefits Of Aavarai: ஆவாரையின் மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். இதனையடுத்து, அவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இருவரும் இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் இங்குள்ள டண்டீ பல்கலைகழகத்தில் படித்து வந்துள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மாணவர்களின் மறைவு குறித்து தெரிவித்துள்ளது. மாணவர்களின் இறப்பு செய்தி கேட்டு பல்கலைக்கழகமும், தூதரகமும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்தபின், மாணவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்று இந்திய தூதரகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.