![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/04/Senna-auriculata-380x214.jpg)
ஏப்ரல் 19, சென்னை (Health Tips): ஆவாரையில் உள்ள மூன்று வகைகளை (Senna Auriculata) மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். அவை பொன்னாவரை, சுடலாவாரை, நில ஆவாரை என மூன்று வகைப்படும்.
ஆவாரையின் பயன்கள்:
ஆவாரை நீரை பருகினால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது. இதனால், உண்டாகும் நரம்பு மண்டல பாதிப்பு, தோல் பாதிப்பு, சிறுநீர் பாதிப்பு மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் குணமாகிறது. மேலும், இதய சம்மந்தமான நோய்கள் மற்றும் கண் பார்வை நோய்கள் ஆகியனவும் குணமாகிறது. இன்சுலின் சுரக்கவும், ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. Heatwave Death In TN: கோடை வெயில் தாக்கம்; வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து பலி..!
ஆவாரைப் பொடி சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும். மேலும் ஆண்மை குறைவு, சிறுநீரில் விந்து வெளியேறுதல், வியர்வை நாற்றம், உடல் வறட்சி, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்ல பயனளிக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் ஆவாரை குடிநீர் நல்ல பயனைத் தருகிறது. கருச்சிதைவை தடுத்து, கர்ப்பச் சூட்டை குறைக்கவும் இது உதவுகிறது.
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், ஈரல் கெட்டுப் போனவர்கள் ஆவாரை குடிநீரை பருகுவது நல்ல பயனை அளிக்கும். இதய அடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்த சோகைக்கு நல்ல தீர்வும் இது அளிக்கிறது.