Woman Dies After Eating Biscuit: பிஸ்கெட் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!
பிஸ்கெட் சாப்பிட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜனவரி 29, இங்கிலாந்து (World News): இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, 25 வயது இளம்பெண் ஒர்லா பாஸேண்ட்லே (Orla Baxendale) நடன கலைஞராக இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் நியூயார்க் செல்லும்போது பிஸ்கட் ஒன்றை சாப்பிட்டுள்ளார். அந்த பிஸ்கட் சாப்பிட்டவுடன் திடீரென அவருக்கு அலர்ஜி ஏற்பட்டதால், மயங்கி விழுந்து உயிரிழந்தார். Ola Launches E-Bike Services: இ-பைக் டாக்சி சேவையை தொடங்கிய ஓலா.. விலை எவ்வளவு தெரியுமா?.!
இதனை அடுத்து அவர் சாப்பிட்ட பிஸ்கட்டை சோதனை செய்தனர். அதில் அந்த பிஸ்கெட் வேர்க்கடலையால் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் பிஸ்கட் பாக்கெட்டில் வேர்க்கடலை குறித்து எதுவும் குறிப்பிடாததால் அவர் தெரியாமல் அந்த பிஸ்கட்டை சாப்பிட்டுள்ளார். அதை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளார். சில ஆண்டுகளாக அவர்க்கு வேர்க்கடலை அலர்ஜி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தியும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.