UK Woman Recounts Sexual Trauma: ஆன்மீக பெயரில் பலாத்கார கொடுமை: இங்கிலாந்து இளம்பெண்ணுக்கு இந்தியாவில் துயரம்.. அதிர்ச்சி தரும் உண்மை.!
54 வயதான பெண் ஒருவர், இந்திய கடவுள் நாயகன் ரஜ்னீஷின் மோசமான பாலியல் வழிபாட்டில் வளர்க்கப்பட்ட தனது வேதனையான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
செப்டம்பர் 30, லண்டன் (World News): இங்கிலாந்தினை சேர்ந்தவர் பிரேம் சர்க்கம். இவருக்கு வயது 54. இவர் சன்னியாசி சமூகத்தினால் இவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை பற்றி ஒரு தனியார் நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர், நாங்கள் இங்கிலாந்தில் இருந்து, புனேவில் உள்ள ஒரு வழிபாட்டு ஆசிரமத்தில் சேர்வதற்காக இந்தியாவிற்கு வந்தோம் என்று தெரிவித்துள்ளார். பிரேம் சர்க்கத்தின் தந்தை முழுவதுமாக சன்னியாசி வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவரின் பெயரை மாற்றி உள்ளார். எப்போதும் காவி உடையை அணிய ஆரம்பித்தார்.
அந்த மடத்தில் பெற்றோரின் பாலியல் சுதந்திரத்திற்கு தடையாக குழந்தைகளை பார்க்கும் ஒரு தத்துவத்தினை பின்பற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டார். இந்த தத்துவ வழிபாடுகள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு வழி வகுத்தியதாக பிரேம் கூறியுள்ளார். அதாவது பிரேம் ஆன்மீக மடத்தில் அவரின் ஏழு முதல் 12 வயது வரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த வயதில் தனக்கு நேர்வது என்னவென்று அறியாத குழந்தையாக இருந்துள்ளார். அவருக்கு 12 வயது இருக்கும் பொழுது அவரின் தந்தை அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து ஓரிகான் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். தனக்கு 16 வயது வந்த பொழுதே தனக்கு நேர்ந்த கொடுமைகள் என்னவென்று தான் அறிந்ததாக பிரேம் கூறியுள்ளார். Nepal Floods: நேபாளத்தை புரட்டியெடுத்த கனமழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 112 பேர் பலி., 62 பேர் மாயம்..! பதறவைக்கும் வீடியோ வைரல்.!
1970 களில் நிறுவப்பட்ட ரஜ்னீஷ் வழிபாட்டு முறை, ஆன்மீக அறிவொளியை விரும்பும் மேற்கத்திய பின்பற்றுபவர்களை ஈர்த்தது. இருப்பினும், அதன் அமைதியான மேற்பரப்பின் கீழ், குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். ஓஷோ என்று அழைக்கப்பட்ட ரஜ்னீஷ், புனேவில் தனது ஆன்மீக இயக்கத்தை நிறுவுவதற்கு முன்பு ஒரு தத்துவ விரிவுரையாளராக இருந்தார். ரஜ்னீஷின் வழக்கத்திற்கு மாறான பாலியல் சுதந்திரத்தின் மீதான முக்கியத்துவம், அவருக்கு இந்தியாவில் "செக்ஸ் குரு" என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தன. அமெரிக்காவில், அவர் 93 சொகுசு கார்களை சேகரித்ததால் "ரோல்ஸ் ராய்ஸ் குரு" என்று அழைக்கப்பட்டார். நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போதிலும், இது வரை ஆவணப்படுத்தப்படவில்லை.
ஒரேகான் வழிபாட்டு முறை குறித்து அமெரிக்க குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளால் ஒரு தனி விசாரணை நடத்தப்பட்டது. ஓஷோவின் தனிப்பட்ட செயலாளர் மா ஆனந்த் ஷீலா, உணவு விஷம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இன்றும், சிறிய எண்ணிக்கையிலான ரஜனீஷ் பக்தர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். தற்போது வரவிருக்கும் சில்ட்ரன் ஆஃப் தி கல்ட் ஆவணப்படம், வழிபாட்டிலிருந்து தப்பிய மற்ற இரண்டு பிரிட்டிஷ் பெண்களுடன் பிரேம் சர்காமின் கதையைச் சொல்கிறது.