Nepal Floods (Photo Credit: @yuvnique X)

செப்டம்பர் 29, காத்மண்டு (World News): நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு (Kathmandu) மற்றும் லலித்பூர் (Lalitpur) பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்தது. இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக அங்குள்ள வெவ்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, அங்குள்ள முக்கிய நதிகளில் வெள்ளம் ஆட்பறித்து கரைபுரண்டு ஓடியது. இதனால் கரையோரம் இருக்கும் நகரங்களில், கட்டிடங்களில் வெள்ளநீர் புகுந்தது. பல இடங்களில் நிலம் சரிந்து கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாகிப்போனது. Kolkata Tram End of Era: முடிவுக்கு வருகிறது கொல்கத்தாவின் சகாப்தம்; டிராம் சேவைக்கு முடிவுகட்டியது மேற்குவங்க அரசு.! 

112 பேர் பலி., 62 பேர் மாயம்:

இதனால் கட்டிடங்களில் இருந்த பலரும் மண்ணுக்கடியில் புதைந்த நிலையில், நேபாள (Nepal Flood Landslides) மாநில இராணுவம் மற்றும் பாதுகாப்புப்படையினர், மீட்புப்படையினர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தற்போது வரை அங்கு 112 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 62 பேரின் நிலை என்ன என தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலாக பெய்து வந்த கனமழையால், பல நகரங்கள் தற்போது வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றன.

நெடுஞ்சாலை துண்டிப்பு, 2 நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது:

அங்குள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளான பிரித்வி நெடுஞ்சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காத்மாண்டு நகருடன் கொண்ட தொடர்பு கைவிடப்பட்டுள்ளது. இமாலய மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, காத்மாண்டு மற்றும் லலித்பூர் நகரங்களை புரட்டியெடுத்துள்ளது. 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களுடன் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

ஆட்பறித்து செல்லும் வெள்ளத்தை பதறியபடி கவனிக்கும் மக்கள்:

திடீர் கனமழை & வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு:

காத்மாண்டு, லலித்பூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் கழுகு காட்சிகள்: