Kyiv Missile Strike: உக்ரைன் நகரங்கள் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்; ஆண்டுகள் கடந்தும் தொடரும் உக்ரைன் - ரஷியா போர்.!
நேட்டோவில் இணையும் முடிவை கைவிட்டு, தன்னுடன் சேரும் வரையில் தாக்குதல் நடக்கும் என ரஷ்யா விடாப்பிடியாக உறுதியுடன் இருப்பதால் ஆண்டுகள் கடந்தும் தாக்குதல் உக்ரைன் மண்ணில் தொடருகிறது.
நவம்பர் 29, க்யூவ் (World News): உக்ரைன் நாட்டை தன்னிடம் சரணடையச்சொல்லி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 24 பிப்ரவரி 2022 அன்று அந்நாடு மீது படையெடுத்து சென்றார். அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவை ஏற்ற ரஷிய இராணுவம், உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் பல்முனை தாக்குதலை முன்னெடுத்தது. இதனால் உலகளவில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தோர், பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டனர். சிலர் வான்வழி தாக்குதலில் சிக்கி உயிரிழக்கவும் செய்தனர்.
நேட்டோவில் இணைய தொடரும் முயற்சி: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடன் இணைய மறுப்பு தெரிவித்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஒன்றிணைய முயற்சித்து வருகிறார். அதற்காக ஐநா தலைவர்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை தொடர்ந்து நேரில் சந்தித்து ஒத்துழைப்பு வேண்டி வருகிறார். போரின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. Youth Arrest After Obscene Pics Shared: காதலை கைவிட்ட இளம்பெண்; தனிமை காட்சிகளை ஆன்லைனில் பதிவிட்ட காதலன்... பருவ வயது காதலால் நடந்த பகீர் சம்பவம்.!
ரஷியாவின் உச்சபட்ச எச்சரிக்கை: உக்ரைன் நாட்டுக்கு தேவையான இராணுவ தளவாடங்கள், நிதிஉதவி செய்ப்படுகின்றன. போரில் நேரடியாக வேறொரு நாடு களத்திற்கு வந்தால் அணு ஆயுதம் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று ரஷியா உறுதிபட எச்சரித்துவிட்டதால், பிற நாடுகள் எந்த விதமான களரீதியான உதவியையையும் செய்யவில்லை. மாறாக ஐ.நா சபை வாயிலாக ரஷியாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. ஆயினும் ரஷியாவின் பல நட்பு நாடுகள் மேற்கொள்ளும் தொடர் வணிகத்தால் பொருளாதார தடை பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இருதரப்பிலும் தொடரும் இழப்புகள்: கிட்டத்தட்ட இன்னும் 2 மாதங்களில் உக்ரைன் - ரஷியா போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கவுள்ளது. பிராந்திய பாதுகாப்பு கருதி, முந்தைய ஒருங்கிணைந்த சோவியத் யூனியலில் இருந்து விடுபட்ட உக்ரைனை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு இருக்கிறது. இந்த போரின் காரணமாக உக்ரைன் தரப்பில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீண்டும் கியூவ் நகரில் தாக்குதல்: இந்நிலையில், உக்ரைனில் உள்ள கியூவ் (Kyiv) நகரில் மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. க்யூவ் நகரில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த வான்வழி தாக்குதல் காரணமாக, கட்டிடம் தீ விபத்தை எதிர்கொண்டுள்ளது. உயிர் சேதங்கள் குறித்த விபரம் இல்லை. மேற்படி தகவல் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)