UN Food Fund to Afghanistan: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கான்., மக்களுக்கு 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதிஉதவி; ஐ.நா உணவு திட்ட கூட்டத்தில் அறிவிப்பு.!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், அந்நாட்டை கடுமையாக பாதித்தன.
அக்டோபர் 19 , இஸ்லாமாபாத் (World News): ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்ற நிலையில், 19 அமெரிக்க மில்லியன் டாலர்களை ஆப்கானிஸ்தானுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், அந்நாட்டை கடுமையாக பாதித்தன. இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை இழந்தனர். இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் உயிரை இழந்தனர்.
இயங்கிய நாடுகள் சபையில், உணவு பாதுகாப்பு திட்ட அதிகாரியாக ஆப்கானிஸ்தானின் பிரதிநிதியாக இருக்கும் அனல் மரியா சல்கூனா, ஆப்கானிஸ்தானுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு திட்ட ஆலசோனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவலை உறுதி செய்தார். Elon Plan to Ban Access: ஐரோப்பிய யூனியனில் எக்ஸ் சேவையை நிறுத்த எலான் மஸ்க் முடிவு?.. காரணம் இதோ.!
சுமார் 1 இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஹெரட் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், பசி-பட்டினி, பொருளாதார சிக்கலில் தவித்த அந்நாட்டு மக்களை மேலும் வறுமையை நோக்கி தள்ளியது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளை கடந்து பலமுறை நிலநடுக்கம் உறுதி செய்யப்பட்டது.
அக். 07ம் தேதி ஹெராட் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதுக்குள்ள மக்களால் அதுவரை சந்திக்காத பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்குள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமாகின. அடுத்தடுத்த நிலநடுக்கம் அங்கு அழிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தன.
இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தோரில் 90% குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.