Kansas City Gunfire: பேரணியில் திடீர் துப்பாக்கிசூடு; ரேடியோ பேச்சாளர் பலி., 22 பேர் படுகாயம்.!

22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Kansas City Shot (Photo Credit: @TheInsidePaper X)

பிப்ரவரி 15, மிசௌரி (World News): அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாகாணம், கான்சாஸ் நகரில் சூப்பர் ஓவல் வெற்றிகொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு இருந்தனர். அச்சமயம் மர்ம நபர் கூட்டத்தின் நடுவே இருந்து திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் வானொலி பேச்சாளர் லிசா லோபஸ் என்பவர் பலியாகினர். 9 குழந்தைகள் உட்பட 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். IND Vs ENG Test: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி; இந்தியா வந்து போட்டியை காணும் இங்கிலாந்து ரசிகர்கள்., உற்சாக பேட்டி.! 

3 இளைஞர்கள் கைது: துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட இடத்தில் 800க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிசூடு நடத்தியதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் மிசௌரி மாகாணத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.