US President Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024.. கமலா ஹாரிஸின் அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு..!

அமெரிக்காவில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kamala Harris (Photo Credit: @WatcherGuru X)

செப்டம்பர் 25, சான் ஜோஸ் (World News): அமெரிக்காவில் நவம்பர் 2024-ல் நடைபெறவுள்ள தேர்தலில் புதிய அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். இன்னும் சில மாதங்களே இருப்பதால் அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன், பின் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மறுபக்கம் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிடுகிறார். பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸே வெற்றிப் பெறுவார் என கூறப்பட்டுள்ளது. AkzoNobel Layoffs: அக்ஸோநோபல் நிறுவனத்தின் ஊழியர்களில் 2,000 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன?!

துப்பாக்கிச்சூடு: இந்நிலையில், அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்ம நபர்கள் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை பிரசார கூட்டத்தில் ஒருமுறையும், கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு முறையும் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்ல முயற்சி நடந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முக்கிய வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.