Dulux Paint Maker Logo | AkzoNobel Logo File Pic (Photo Credit: YouTube | Wikipedia)

செப்டம்பர் 25, ஆம்ஸ்டர்டாம் (Technology News): டூலக்ஸ் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமான (Dulux Paint Maker) அக்ஸோநோபல், உலகம் முழுவதும் 2,000 ஊழியர்களை குறைக்க உள்ளது. டூலக்ஸ் பெயிண்ட்டிற்குப் பின்னால் உள்ள டச்சு நிறுவனமான அக்ஸோநோபல் (AkzoNobel), உலகம் முழுவதும் சுமார் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் (Layoffs) செய்யவுள்ளது. இந்த நடவடிக்கையானது பரந்த செலவை குறைக்க மேற்கொள்ளப்பட்டதாகும். இது முதன்மையாக அதன் தலைமை அலுவலகங்களில் உள்ள பதவிகளை குறிவைக்கிறது. Celebrating Popcorn: மறக்க முடியாத சிற்றுண்டியில் ஒன்றான பாப்கார்ன்; கூகுளின் இன்றைய சிறப்பு டூடுல்.! விபரம் உள்ளே.!

இதன் காரணமாக, தலைமை அலுவலகங்களில் நிதி அல்லது உலகளாவிய வணிகச் சேவைகள் பாதிக்கப்படும் என்று நிறுவனத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். 2027-ஆம் ஆண்டுக்குள் 250 மில்லியன் யூரோக்களை சேமிக்கும் நோக்கத்துடன், கடந்த ஆண்டு அக்ஸோநோபலால் வெளியிடப்பட்ட "தொழில்துறை மாற்றம்" திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் உள்ளன.

மேலும், வேலைக் குறைப்பினால் எவ்வளவு செலவுகள் சேமிக்கப்படும் என்பது குறித்த அறிக்கையை அக்ஸோநோபல் வழங்கவில்லை. இந்த மாற்றங்களால் பகுதிநேர பதவிகள் பாதிக்கப்படலாம் என்றும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டமைப்பு சரிசெய்தல் பணிகள் வருகின்ற 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.