Joe Biden: "அதிபர் தேர்தலுக்கு தகுதியானவர் நான் மட்டுமே" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெருமிதம்.!
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பிரச்சார கூட்டங்கள், அரசியல் பேச்சுக்கள் என களநிலவரங்கள் களைகட்டி இருக்கின்றன.
பிப்ரவரி 09, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05ம் தேதி ஜனாபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றியடையும் நபர், ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்பார். கடந்த 2020 அமெரிக்க அதிபர் தேர்தலை போல, 2024 அதிபர் தேர்தலிலும் ஜோ பைடன் (Joe Biden) - டொனால்ட் ட்ரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
எச்.1 பி விசா கட்டுப்பாடு: 2016ல் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற வாசகத்துடன் தேர்தலில் களமிறங்கிய ட்ரம்ப் (Donald Trump) வெற்றியடைந்து ஆட்சிக்கு வந்ததும், அமெரிக்காவில் பிற நாட்டு மக்கள் குடியேறும் அல்லது வேலைக்காக வந்து செல்லும் எச்.1 பி விசாவுக்கான அதிரடி கட்டுப்பாடை விதித்து வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
கறுப்பினத்தவர் கொலை: அதனைத்தொடர்ந்து, கொரோனா பரவலின் போது அதிபர் மீது ஏற்பட்ட பிரச்சனை, கறுப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரம், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் மிகப்பெரிய மதில்சுவர் அமைத்ததை எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கியது என டிரம்புக்கு எதிராக விவகாரங்கள் திரும்பியதால், 2020 தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். Krishnagiri Earthquake: கிருஷ்ணகிரியில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 2.9ஆக பதிவு..!
எதிரெதிர் துருவங்களாய் களம்: தற்போதைய சூழலில் (US President Election 2024) ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இருக்கும் ஜோ பைடனும் - குடியரசு கட்சியின் உறுப்பினராக இருக்கும் டொனால்ட் டிரம்பும் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாய் களம்காணவுள்ளனர். இந்நிலையில், நேற்று அங்குள்ள உள்ளூர் நேரப்படி இரவு 07:45 மணியளவில் நாட்டு மக்களிடையே அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.
நான் மட்டுமே தகுதியானவர்: அப்போது அவர் பேசுகையில், "எனது நினைவு மற்றும் நினைவாற்றல் நன்றாக இருக்கிறது. அமெரிக்காவின் அதிபராக நான் பொறுப்பேற்று, நான் தொடங்கிய பணிகளை முடிப்பதற்கு, அமெரிக்க நாட்டிலேயே தகுதியான நபர் நான் மட்டுமே" என கூறினார். இது அதிபரின் தேர்தல் வியூக பேச்சு என உள்ளூர் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.